Header Ads



வெளிநாடுகளில் உள்ள 700 பேர் மீண்டும், இலங்கைக்கு வர அனுமதி கோரியுள்ளனர்


வெளிவிவகார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ´கொன்டேக் ஸ்ரீலங்கா´ அதாவது இலங்கையை தொடர்பு கொள்ளுங்கள் என்ற இணையதளத்தின் மூலம் இதுவரை 17000 இலங்கையர்கள் தம்மை பதிவு செய்துக்கொண்டுள்ளனர். 

இந்த இணையத்தின் ஊடாக நேற்றைய தினம் நண்பகல் வரையில் சுமார் 17,457 பேர் பதிவு செய்துக்கொண்டுள்ளதாகவும் அவர்களில் சுமார் 6,773 பேர் மத்திய கிழக்கு வலயத்தை சேர்ந்தவர்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஐ.சி.டி.ஏ நிறுவனத்துடன் இணைந்து கடந்த 26 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு WWW.CONTACTSRILANKA.MFA.GOV.LK என்ற இணைய முகவரியை அறிமுகப்படுத்தியது. 

இந்த இணைய தளத்தின் ஊடாக தம்மை பதிவு செய்துக்கொண்ட சுமார் 700 பேர் வரையில் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கான அனுமதியை கோரியுள்ளனர். 

எனினும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வரையில் இலங்கைக்கு வர வேண்டாம் எனவும் மாறாக அதுவரை தற்போது தங்கியுள்ள நாடுகளில் பாதுகாப்பாக இருகக்குமாறு அவர்களை அரசாங்கம் கேட்டுள்ளது. 

அவ்வாறு வெளிநாடுகளில் தங்கியிருப்போருக்கு தேவைப்படும் உதவிகளை தூதரங்களின் ஊடாகவும் ஆணையாளர்களுடாகவும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.