Header Ads



70 நாடுகளில் கொரோனா, ஐரோப்பிய தேசங்களில் உணவு தட்டுப்பாடு

உலகம் முழுவதும் 70 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் மக்கள் பெரும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகி உள்ளனர்.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி உட்பட பல நாடுகளில் உள்ள பிரபல வர்த்தக நிலையங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் வேகாஸ், பிரான்ஸின் சில நகரங்கள், அவுஸ்திரேலியா உட்பட பல பிராந்தியங்களில் பிரபல வர்த்தக நிலையங்களில் வெறுமையாக காணப்படும் பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும் கொரோனா தொற்றினை கட்டுப்படுவதற்காக மருந்து ஒன்று வெற்றிகரமாக சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் அதனை வெளியிடுவதற்கு 18 மாதங்களாகும் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா தொற்றினால் தற்போது வரையில் 3162 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டுகிறது.

அமெரிக்காவில் 11 பேர் உயிரிழந்த நிலையில், கலிபோர்னியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடாக இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகளும் நாளாந்தம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.