Header Ads



தெஹிவளை, கல்கிஸ்ஸ, இரத்மலானை பகுதியில் வசிக்கும் 4000 குடும்பங்களுக்கு நெருக்கடி...!

கொழும்பின் புறநகர் பகுதிகளில் சான்றிதழைப் பெறாத அடுக்குமாடி குடியிருப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தெஹிவளை - கல்கிஸ்ஸ நகரசபை தீர்மானித்துள்ளது.

தெஹிவளை - கல்கிஸ்ஸ நகர சபை மேற்கொண்ட ஆய்வின்படி சுமார் 100 குடியிருப்புகள் உடன்பாட்டு சான்றிதழை பெறவில்லை என தெரியவந்துள்ளது.

நகர சபை, வீட்டுவசதி, நகர அபிவிருத்தி மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புக் குழுவின் தலைவரும், உள்ளூராட்சி சபை உறுப்பினருமான Kris Balthazaar இதனை தெரிவித்துள்ளார்.

சான்றிதழ் இன்றி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தெஹிவளை கல்கிஸ்ஸ பகுதியில் வசிப்பவர்களுக்கு இது நியாயமற்றதாகிவிடும். ஏனெனில் இந்த அங்கீகரிக்கப்படாத அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் நகர சபைக்கு கட்டணங்களை செலுத்துவதில்லை. அதற்கு பதிலாக குப்பை சேகரிப்பு மற்றும் பிற நகரசபை வசதிகள் போன்ற அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர்.

வீட்டு குடியிருப்புகளை பெறும் போது விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் அவற்றில் சில தேவையான அனுமதிகள் மற்றும் அடிப்படை பாதுகாப்பு விதிமுறைகள் இல்லாமல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேவையான ஆவணங்கள் மற்றும் அனுமதிகளைப் பெறாத குடியிருப்பு மேம்பாட்டாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம் வழங்கப்படும். மேலும் எந்தவொரு மேம்பாட்டாளரும் குடியிருப்பாளர்களுக்கு இறுதி ஆவணங்களை வழங்கத் தவறினால் வீட்டுக் குழுத் தலைவருக்கு தெரிவிக்குமாறு குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என Kris Balthazaar மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தெஹிவளை, கல்கிஸ்ஸ, நுகேகொட, இரத்மலானை மற்றும் கொஹுவெல பகுதிகளில் வாழும் 4,000 குடியிருப்பாளர்கள் நெருக்கடி முகங்கொடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.