Header Ads



32 முஸ்லிம் Mp க்களை பெற, அரிய வாய்ப்பு


 - அன்ஸிர் -

முஸ்லிம்கள்  தனித்து போட்டியிட்டால், நாடு முழுவதும் இருந்து 32 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை, வென்றெடுக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயாதீன முஸ்லிம் அணியொன்று, மேற்கொண்ட ஆய்விலேயே இத்தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் முஸ்லிம்கள் தனித்து, சுயாதீனமாக எந்தவொரு தேசிய அல்லது சிறிய கட்சிகள் சார்பில் போட்டியிடாது, ஒரே அணியில் போட்டியிட்டால், இவ்வாறு 32 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்க முடியுமென, அந்த ஆய்வில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நடுநிலை வாய்ந்த முஸ்லிம் அணியொன்றே, இந்த ஆய்வை மேற்கொண்மை குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. we don’t need more than our representatives. We need only 10% (22)out of 225 MPs

    ReplyDelete
  2. நடுநிலை இல்லாத முஸ்லிம் அணி எது?

    நாட்டிலுள்ள ஒருசிருபான்மையினர் ஒருகுடிமகனுக்குறிய உரிமைகளை கேட்டால் சிலமுட்டால்கள் அவனை தீவிரவாதியாக சித்தரிக்கின்றார்கள்!

    முஸலிம்கள் யாருடனும் அணிசேராமல் தனியாக தேர்தலில் போட்டியிட்டால் 25 MP களை ஆக்குறைந்தபட்சம் பெற்றுக்கொள்வது நிச்சயம் இதை எவ்வாறு அவர்களுக் விளங்கப்படுத்துவது!?

    ReplyDelete
  3. Hi
    Please provide the justifications of 32

    ReplyDelete
  4. ஆகக் கூடியது எங்களுக்கு எங்களது விகிதாசார அடிப்படையில் 20 - 22 ஆசனங்கள் கிடைத்தால் அதுவே மிகவும் போதுமானது. இன்னொரு சமூகத்தின் வயிற்றில் அடித்து அவரகளது அந்த ஆசனங்களைப் பெற்று வரக்கூடிய உறுப்பினர்கள் இராஜபோக வாழ்வு நடாத்த முஸ்லிம்கள் அனுமதிக்கவும் மாட்டார்கள். அடுத்து அவரகளது வயிற்றெரிச்சலும் எங்களுக்கு தேவையில்லை. பகையும் தேவையில்லை. கையும் பேனாவும் கடதாசியும் பிரசுரிக்க Jaffna Muslim மும் இருக்கின்றதுதானே எனறு தவறான கருத்துக்களை பிரசுரிக்க முயற்சி செய்ய வேண்டாம். அதற்கான தேவைப்பாடு எதுவும் முஸ்லிம் மக்களிடம் இல்லை.

    ReplyDelete
  5. Please don't include Assad Saly to this party..

    ReplyDelete
  6. இந்த ஆய்வு subjective வ்வானதாகும்.
    தனித்து போட்டியிடுவது கிழக்கில்கூட சாத்தியமில்லை.
    முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று தனித்துப் போட்டியிட்டால் முஸ்லிம் வாக்குகள் முஸ்லிம் கூட்டமைப்பு அணி வேட்ப்பாளர் ஆழும்கட்ச்சி அணி வேட்பாளர் என உடையும். மிக மோசமான ஒரு சூழலில் முஸ்லிம் வாக்குகள் 1. ஆழும்கட்சி, 2. எதிற்கட்ச்சி (சஜித்) 3. எதிற்கட்ச்சி (ரணில்) 4.முஸ்லிம் கூட்டமைப்பு என நான்காக உடையக்கூடும். அதேசமயம் ராஜபக்சவுக்கு பெரும்பாண்மை சிங்களவர்களை தங்கள் பக்கம் ஒன்று குவிக்க புதிய கோசங்களை உருவாக்கும் வாய்ப்பு அமையலாம். கிழக்கில் தமிழர்கள் வெற்றிபெறக்கூடிய தமிழ் அணிக்கு மொத்தமாக வாக்களிக்கும் சூழல் உருவாகலாம். இத்தகைய பின்னணியில் கிழக்கில் மட்டுமன்றி அகில இலங்கையிலும் முஸ்லிம்கள் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி வேட்ப்பாளர்கள் தொகை உயரும் என சொல்வது விஞ்ஞான ரீதியாக தோன்றவில்லை.

    ReplyDelete
  7. எண்ணிக்கை எந்த வெற்றியையும் எமக்குப் பெற்றுத்தரவில்லை.மாறாக எண்ணமும் முயற்சியும் தான் முக்கியமானது.
    உ+ம்.1. இஸ்லாமிய யுத்த வெற்றிகள்.
    2. 1987 களுக்கு முன் நாம் பெற்றுக் கொண்ட உரிமைகள்.
    எனவே,உரிமை என்ற பெயரில் கூக்குரலிட்டு, சமூகத்தை உசுப்பேத்தி தனது சொத்து சுகங்களை மட்டும் முன்னிலைப்படுத்தி தொழிற்படும் ஸ்ரீ.ல.மு.கா மற்றும் அ.இ.ம.கா கட்சிகள் இரண்டையும் நிராகரித்து விட்டு தேசிய கட்சிகளில் குறிப்பாக இன்றைய சூழலில் மொட்டுக் கட்சியுடன் இணைந்து பிரதிலாபங்களை எதிர்பார்க்காத, வேலை செய்யத் தெரிந்த திறமைசாலிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் பற்றி அதிக அக்கறை கொள்ளவும்.

    ReplyDelete
  8. BE unity.what ever it is.
    Unity only bring peace harmony for us.

    ReplyDelete

Powered by Blogger.