Header Ads



ஞானசாரருக்கு மன்னிப்பு வழங்கியமைக்கு எதிர்ப்பு, மைத்திரிக்கு 3 வாரம் கால அவகாசம்

(செ.தேன்மொழி)

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பை வழங்கிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பதாயின், அடுத்த மூன்று வாரங்களுக்கு முன்னர் அதனை தெரிவிக்குமாறு குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போயுள்ளதாக கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி மற்றும் மாற்றுக் கொள்கைகள் பிரிவின் நிறைவேற்று பணிப்பாளரும் பேராசிரியருமான பாக்கியஜோதி சரவணமுத்து ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயிர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு கொள்ளப்பட்ட போதே இவ்வாறு காலவகாசம் வழங்கப்பட்டது.

1 comment:

  1. மைத்திரியின் இந்த சட்டவிரோதமான நடவடிக்ைகயும், நீதிமன்றத்தையும் இந்த நாட்டின் சட்டத்தையும் அவமதித்து கேளிக்கூத்தாக நடாத்தியமைக்கும் இந்த நாட்டின் சட்டத்தின் உச்சகட்ட தண்டனையை மன்னிப்பு வழங்கியவருக்கும், வழங்கப்பட்டவருக்கும் கொடுக்கப்பட வேண்டும்.அதற்காக இந்த நாட்டின் சட்டம் சார்ந்த கௌரவமான அத்தனை உத்தியோகஸ்தர்களும் சட்ட அறிஞர்கள் அனைவரும் முன்னின்று அந்த உயரிய காரியத்தை செய்து முடிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.