Header Ads



உலகை உலுக்கிய சிறுவனும், புகைப்படமும் - 3 பேருக்கு தலா 125 ஆண்டுகால சிறை தண்டனை


உலகை உலுக்கிய சிறுவன் அய்லான் குர்தி மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 3 பேருக்கு தலா 125 ஆண்டுகால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது துருக்கி நீதிமன்றம்

கடந்த 2015-ம் ஆண்டு சிரிய அகதிகள் சென்ற படகு துருக்கி கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது ஆண் குழந்தையான அய்லான் குர்தி உள்பட 12 பேர் பலியாகினர்.

குழந்தை அய்லான் குர்தி துருக்கி கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் சடலமாக கிடந்த புகைப்படம் உலகையே உலுக்கியது. அகதிகளின் துயரங்களை விபரிக்கும் விதமாக அமைந்த இந்த புகைப்படம் சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

இதையடுத்து, அந்த படகு விபத்து தொடர்பாக அகதிகளை சட்டவிரோதமாக படகில் அழைத்து சென்றதாக 3 பேர் துருக்கி பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் 3 பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் தலா 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.



2 comments:

  1. Ya Allah ! grant loftiest stations in 'Jannathul Firdous' to this immaculate child. Aameen.

    ReplyDelete
  2. Ya Allah ! grant loftiest stations in 'Jannathul Firdous' to this immaculate child. Aameen.

    ReplyDelete

Powered by Blogger.