Header Ads



கொ​ரோனா தொற்று - 2 ஆவது நோயாளியின் வீட்டில் கிருமி அகற்றல் பணி


கொழும்பில் கடந்த வியாழக்கிழமை கொ​ரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆவது நோயாளியின் வீட்டை கொழும்பு மாநகர சபை பொது மக்கள் சுகாதார திணைக்கள அதிகாரிகள் கிருமி தொற்றிலிருந்து அகற்றியுள்ளனர். 

கொவிட் 19 எனப்படும் கொரன்னா வைரசால் இதுவரை இலங்கையில் 10 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல் மேலும் பலர் கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகி நாட்டில் இருக்கக் கூடும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு பாரிய அளவில் பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் திரையரங்குகளை மூடுவதற்கு அரசாங்கம் இன்று (14) நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுவரை 103 பேர் வரையில் கொரன்னா வைரஸால் பீடிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் நிலையில் அவர்கள் நாடு முழுவதுமுள்ள 14 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இத்தாலியில் இருந்து இன்றும் 18 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர்கள் கண்காணிப்பு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

2 comments:

Powered by Blogger.