Header Ads



2 வது நாளாகவும் கொரோனா, நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

இன்றைய தினம் (26) மாலை 4.45 மணி வரையில் எந்தவொரு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளரும் நாட்டில் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 

கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார். 

அதன்படி, இரண்டாவது நாளாகவும் நாட்டில் இதுவரை எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் இனங்காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

நேற்று முன்தினம் இரவு வரை இந்நாட்டில் 102 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அவர்களில் 6 பேர் தற்போது நிலையில் முழுவதுமாக குணமடைந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வைரஸ் தொற்றுக்குள்ளான காரணத்தால் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மற்றுமொரு நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி தற்போது மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

மேலும், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 255 பேர் நாடு பூராகவும் உள்ள 21 வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள 43 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மூன்றாயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. Again - ALHAMDULILLAH. Lets us all as "DUA" from God AllMighty that it should continue to remanin so for the comming weeks, months, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.