Header Ads



மக்களே அவதானம், கொரோனா வைரஸ் பரவலின் 2 ஆம் கட்ட அவதான நிலையில் இலங்கை

(லியோ நிரோஷ தர்ஷன்)

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முழு உலகுமே சிவப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா , இத்தாலி, ரஷ்யா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் வைரஸ் தாக்கத்திலிருந்து மீள முடியாது தவிக்கின்றது.  மறுப்பறம் மேற்குலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை சர்வதேச சமூகத்தை அச்சம் கொள்ள வைத்துள்ளது. அதே போன்று சீனா அந்த அபாய நிலையிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் நிலை அபாயவலயத்தில் இலங்கை தற்போதுள்ளது. இந்த இரண்டாம் நிலை அவதானம் அல்லது அபாய வலயமென அரசாங்கம் எதனை குறிப்பிடுகின்றது என்பதை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி கடந்த 11 ஆம் திகதி (மார்ச்) அடையாளம் காணப்பட்டார்.  இந்த திகதியிலிருந்து 14 நாட்களாக கருத கூடிய மார்ச் 25 ஆம் திகதி வரையான கால எல்லையை கொரோனா வைரஸ் இலங்கையை தாக்கிய முதலாவது காலக்கட்டமாக அல்லது ஆரம்ப நிலையாக கருதப்பட்டது.

கடந்த புதன்கிழமையுடன் 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்த கொரோனா வைரஸ் பரவலுக்கான முதலாவது கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அதன் இரண்டாம் கட்ட வைரஸ் தொற்று  குறித்து எச்சரிக்கையானதும் அபாயகரமானதுமான காலப்பகுதியில் இலங்கை உள்ளது. ஏனெனில் முதலாவது வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் ஊடாக எத்தனை  பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்பது வெளிப்படுகின்ற காலப்பகுதியிலேயே இலங்கை தற்போதுள்ளது. 

இதனடிப்படையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் தொடக்கம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1;30 மணி வரைக்கும் பதிவாகியிருந்த 106 பேரிடிருந்து பரவி எண்ணிக்கையின் அளவு இந்த இரு வாரத்திற்குள் வெளிப்பட வேண்டும். இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் இரண்டாது கட்ட அபாய நிலையாக அரசாங்கம் தற்போது கருதுகின்றது.

வைரஸ் தொற்று பரவாமளிருக்க அரசாங்கம் கடந்த நாட்களில் அமுல்படுத்தியிருந்த ஊரடங்கு சட்டம் உட்பட பல்வேறு நடவடிக்கைளின் ஊடாக இரண்டாம் கட்ட அபாய நிலையில் ஏற்பட கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கிலேயே செயற்பட்டது. ஆனால் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்தமை மற்றும் வர்த்தக நிலையங்களில் மக்கள் முண்டியடித்தமை போன்ற சம்பவங்கள் வைரஸ் தொற்று தீவிரமடையலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

எனவே தான் அரசாங்கம் மக்களின் நடமாட்டத்தை முழு அளவில் முடக்கும் வகையில் ஊரடங்கு சட்டத்தை கடுமையாக்கியுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் தொடக்கம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1;30 மணி வரைக்கும் பதிவாகியிருந்த 106 பேரிடிருந்து பரவி எண்ணிக்கையின் அளவு இந்த இரு வாரத்திற்குள் வெளிப்பட வேண்டும். இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் இரண்டாது கட்ட அபாய நிலையாக அரசாங்கம் தற்போது கருதுகின்றது. 

வைரஸ் தொற்று பரவாமளிருக்க அரசாங்கம் கடந்த நாட்களில் அமுல்படுத்தியிருந்த ஊரடங்கு சட்டம் உட்பட பல்வேறு நடவடிக்கைளின் ஊடாக இரண்டாம் கட்ட அபாய நிலையில் ஏற்பட கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கிலேயே செயற்பட்டது. ஆனால் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்தமை மற்றும் வர்த்தக நிலையங்களில் மக்கள் முண்டியடித்தமை போன்ற சம்பவங்கள் வைரஸ் தொற்று தீவிரமடையலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

எனவே தான் அரசாங்கம் மக்களின் நடமாட்டத்தை முழு அளவில் முடக்கும் வகையில் ஊரடங்கு சட்டத்தை கடுமையாக்கியுள்ளது. இந்த நிலை பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 10 திகதி வரை தொடரும் . ஏனெனில் இரண்டாம் கட்ட அவதானத்திற்காக அரசாங்கம் மேலும் 14 நாட்களை கணித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. எனவே இந்த இருவார காலம் என்பது இலங்கைக்கு கொரோனா வைரஸ் குறித்த முக்கியமான காலப்பகுதியாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.