Header Ads



2 ஆவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டிருந்தால், சஜித் ஜனாதிபதியாக தெரிவாகி இருப்பார்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்கை எண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தால், நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டிருப்பார் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சூரியவெவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச நான்கு லட்சம் வாக்குகளை குறைவாக பெற்றிருந்தால், இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண நேரிட்டிருக்கும். மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைத்த இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டிருந்தால், சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவாகி இருப்பார்.

கட்சியை பாதுகாக்க பல்வேறு நபர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என கூறிய போது, நாட்டை காப்பாற்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நான் கூறினேன்.

பதவி, பட்டங்கள் எதுவும் கிடைக்காவிட்டாலும் கோட்டாபய ராஜபக்ச முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு தடையேற்படும் விதமான எந்த நடவடிக்கைகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளாது எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.