Header Ads



“டெல்லியைத் தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்வா கும்பல் வன்முறை”

மேகாலயாவில் குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் வன்முறையாக வெடித்து 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. அதற்கு எதிராக 80 நாட்களாக அனைத்து சமூக மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக டெல்லி ஷாஹீன்பாக்கிலும் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது.

அமைதியாக நடைபெறும் போராட்டத்தைச் சீர்குலைக்க பல்வேறு மோசமான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டது. அதேபோல் வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தையும் வன்முறையாகியது பா.ஜ.க கும்பல்.

இந்த வன்முறையில் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள். அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. வன்முறையில் இந்துத்வா கும்பல் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். அதில் பலர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியது டெல்லி காவல்துறையல்ல; வன்முறையாளர்கள். மேலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த சம்பவங்களில் இருந்து வடகிழக்கு டெல்லி தணிந்துள்ள நிலையில், மேகாலயாவில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் வன்முறையாக வெடித்து 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேகாலயாவில் வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் இருந்து வந்தவர்கள் அதிகளவில் தங்கியுள்ளனர். இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். மேகாலயா முழுவதையும் 'இன்னர் பெர்மிட்டின்' கீழ் கொண்டுவர வேண்டும் என்று கே.எஸ்.யு. மாணவர் அமைப்பு மற்றும் பழங்குடியின அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

அதேபோல், மேகாலயாவில் வாழும் பழங்குடிகள் அல்லாத மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மேகாலயாவின் கிழக்கு காஸி மலைப்பகுதி மாவட்டத்தில் உள்ளது இச்சமதி கிராமத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு மற்றும் இன்டர்லைன் பெர்மிட் (ஐ.எல்.பி.) தொடர்பான ஆலோசனை கூட்டம் மற்றும் பேரணி நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் காஸி மாணவர் சங்க உறுப்பினர்களும், மலைவாழ் பகுதி அல்லாத மக்களும் கலந்து கொண்டனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக உருவெடுத்தது. இருதரப்பினரும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு மோதிக்கொண்டனர். இந்தக் கலவரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதுபற்றிய செய்தி பரவியதும் அந்தப் பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டன.

வன்முறை பகுதியில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதம் தாங்கிய போலிஸார் ரோந்து சுற்றி வருகிறார்கள். இந்த வன்முறைச் சம்பவம் பரவாமல் இருக்க மாநில நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஷில்லாங் உள்பட 6 மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் 48 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

செல்போன் சேவை மற்றும் இன்டர்நெட் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இந்த வன்முறை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.