Header Ads



கொரோனாவை எதிர்க்க 25 மில்லியன் நிதியுதவி செய்த இலங்கை கிரிக்கெட் - பிரதமர் மகிந்த நன்றி தெரிவிப்பு


இலங்கையில் கொரோனாவிற்கு எதிராக போராடும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு 25 மில்லியன் (இலங்கை ரூபாய்) நிதியுதவி அளிப்பதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கையில் 82 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை தவிர்க்க அந்நாட்டு அரசு ஊரடங்கு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனாவால் இலங்கையில் தேசிய சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில், வைரஸ்க்கு எதிராக போராடி வரும் அரசாங்கத்திற்கு உதவும் விதமாக உடனடியாக 25 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் உதவிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பிலிருந்தும் வரும் ஆதரவு மிகப்பெரிய பலமாக உள்ளது. ஆதரவை வழங்க முன்வந்த அனைத்து தனிப்பட்ட வீரர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.