Header Ads



ஜனாதிபதியின் அதிரடி ஏற்பாடு - 24 மணி நேரமும் மக்கள் முறைப்பாடுகளை செய்யலாம்


ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் படி குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் உத்தரவை மீறுதல் அல்லது பொதுமக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்கு எதிராக இந்த பிரிவில் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி 011 2354550 அல்லது 0112 354655 என்ற இலங்கங்களின் ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, 0112 354354 என்ற இலக்கத்தின் மூலமாகவும் நேரடியாக ஜனாதிபதி செயலகத்தை தொடர்பு கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 3872/3873/3874 அல்லது 3875 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவதன் ஊடாகவும் உங்களது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவுவது குறித்து தெரிவிக்க பல தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான தகவல்களை 011 2860003 அல்லது 011 2860004 என்ற எண்களுக்கு அழைத்து வழங்க முடியும் என்பதோடு ஜனாதிபதி ஊடக பிரிவின் 011 2354354 அல்லது 3355 என்ற இலக்கங்களின் ஊடாகவும் தெரிவிக்க முடியுமென ஜனாதபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொதுமக்கள் வழங்கிய தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.