Header Ads



இலங்கையில் கொரோனா சந்தேகத்தில் இன்று, 18 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி

(ஆர்.விதுஷா)

இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கம்  இல்லாத போதிலும்   உலகளாவிய ரீதியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் உலக சுகாதார ஸ்தாபனத்தின்  அறிவுறுத்தல்களுக்கு அமைய  சுகாதார  பழக்க வழக்கங்களை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை, கொரோனா  வைரசின் தாக்கம்  நாட்டில் அதிகளவில்  இல்லயென்பதனால்  பாதுகாப்பு  கவசங்களை  அணிய  வேண்டிய  தேவையில்லை என  சுகாதார அமைச்சின்  தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்  தொற்று   தொடர்பிலான   சந்தேகத்தின்  பேரில்   18 பேர் இன்று -02- நாடளாவிய ரீதியில்  உள்ள வைத்திய சாலைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள்  நான்கு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதான  சுகாதார அமைச்சின் தொற்றுநோய்  தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அங்கொடை தொற்று  நோய் வைத்தியசாலையில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள்  மூன்று  வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். 

றாகமை போதனாவைத்தியசாலையில் ஒருவரும்,  குருணாகலை  வைத்தியசாலையில் வெளிநாட்டவர் ஒருவர்  உள்ளடங்கலாக  இருவரும்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

அத்துடன், நீர்கொழும்பு போதனா வைத்திய சாலையில் மூவரும்   சிறுவர் வைத்தியசாலையில் ஒருவரும் உள்ளடங்கலாக 18  பேரே இவ்வாறு  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. அசட்டையாக இருந்தால் இப்படித்தான் இருதியில் மொத்தமாக வரும்.
    உலகம் விழித்த வேளையில் இவர்கள் மட்டும் வீராப்பு பேசி தூங்கியது மட்டுமல்லாமல் இன்னுமும் சீனர்களை வரவழைத்து க் கொண்டு இருக்கிறார்கள்.
    எங்கே பவித்ரா, நாமல்...?

    ReplyDelete

Powered by Blogger.