March 17, 2020

இங்கிலாந்தில் இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின், தலைமைகளுக்கான பயிற்சிப் பட்டறை


இங்கிலாந்து லெஸ்டர் மாநகரிலே இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் தலைமைகளுக்கான பயிற்சிப் பட்டறை கடந்த (15/03/2020 )ஞாயிற்றுக்கிழமை   (work shop ) ஒன்று இளையோர்களையும் பெண்களையும் நெறிப்படுத்தி சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக மாற்றுவதில் சமூகத்தலமைகள் ஆற்ற வேண்டிய பணிகளும் அதன் கடமைப்பாடுகளும்  Roles & responsibility of Community leaders in building a culture of engagement with youth and women in making our institutions more inclusive and beneficial to British Society  என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது. இதனை லெஸ்டரிலே இயங்கிவரும் SLMS-UK நிறுவனமும் Bolton நகரில் இயங்குகின்ற SLBC-UK நிறுவனமும் இனைந்து  இலங்கை ZAM ZAM பவுண்டேஷனின் வழிகாட்டலோடு ஏற்பாடு செய்திருந்தனர். 50 க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லிம் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த  போதிலும் 32 அமைப்புக்களை சேர்ந்த 65 பேர் கலந்து கொண்டு தங்களை அறிமுகப்படுத்தியதோடு முழு நிகழ்வையும் சிறப்பித்தனர்.  

இந்நிகழ்வை இலங்கையிலிருந்து வருகை தந்து அஸ்ஷேக் யூசுப் முப்தி அவர்கள் நெறிப்படுத்தி வழிப்படுத்தினார் . அவர் அன்று காலை தான் பிரித்தானியா வந்தடைந்தபோதிலும்  சமூகத்தின் பால் கொண்ட அக்கறையின் நிமித்தம் ஒரு நிமிடம் கூட சோர்வடையாது மிகச்சரளமாக அவருக்கே உண்டான பாணியில் அமர்வின் நோக்கத்தையும், தேவைப்பாடுகளையும், முன்னெடுக்க வேண்டிய செயற்திட்டங்களையும், எடுக்க வேண்டிய தீர்மானங்களையும், பெற வேண்டிய அடைவுகளையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்ததோடு அனைவரையும் அதனுள் உள்வாங்கி அனைவரதும் பங்களிப்புகளையும், பணிகளையும் இன்னும் சிறப்பிக்க சிறந்த ஆலோசனைகளை மார்க்க விழுமியங்களோடு வழங்கினார்.  

குறிப்பாக எமது பெண்களின் இன்றைய நிலை என்ன அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ன ? முகம் கொடுக்கும் பிரச்சினைகள் என்ன? அதிலும் குறிப்பாக இங்கு வாழ்பவர்கள்  எவ்வாறான சூழ்நிலைக்குள் அகப்படுகிறார்கள்  ? அதற்கான எமது  தீர்வுகள் என்ன ? இவற்றிலிருந்து அவர்களை எவ்வாறு நாம் பாதுகாப்பது ? எவ்வாறு முன்னேற்றுவது ? அவர்களுக்கான எமது கடமைகள் என்ன ? அவர்களுக்கு எம்மீதான நம்பிக்கையை எவ்வாறு உறுதிப்படுத்துவது போன்ற பல விடயங்களை உதாரணங்களோடு சபையோருக்கு உணர்த்திணார். 

அவ்வாறே இளைஞர், யுவதிகளை எவ்வாறு சமூக, ஆன்மீக பணிகளுக்குள் உள்வாங்குவது ? எவ்வாறு அவர்களை எம்மோடு அரவனைத்துக் கொள்வது ? இந்நாட்டிலும், எம் நாட்டிலும் ஏனைய சமூகங்களிடமிருந்து  நாம் பெற்ற படிப்பினைகள் , படித்த பாடம் என்ன ?  இளையோருக்கான எமது முன்னேற்பாடுகள் என்ன? எமது அடுத்த தலைமுறைக்காக நாம் எதை  விட்டுச்செல்லப்போகிறோம்? அவர்களின் உண்மையான எதிர்பார்ப்பு  என்ன ? நமது கரிசனை என்ன? எதை நோக்கி பயனிக்கிறார்கள்? அவர்களின் தேடல் என்ன?  என்பன போன்ற வினாக்களில் பலவற்றிற்கு நாம் இன்னும் விடை தெரியாமல் உள்ளோம் அல்லது அவற்றை பொருட்படுத்தாது உள்ளோம்  என்பதை உணர்வுபூர்வமாக உணர வைத்தார்.     

மேலும் இலங்கை முஸ்லிம்களின் இரண்டாம் தலைமுறையினரான இன்றைய இளைஞர்களுக்கு சரியான, தெளிவான பாதையை அமைத்துக் கொடுப்பதே இன்றைய அமர்வின் கருப்பொருளில் ஒன்று எனவும் அதை தவறவிடுதலானது சகல தரப்பினருக்கும் பாரிய ஆபத்துகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தினார்.  

இறுதியாக பங்கேற்றோர்கள் வழங்கிய பதில்கள் மூலம் எதிர்நோக்கும் சவால்களில் ( SWOT- analysis மூலம்) ஐந்தில் நான்கு  இளைஞர்களை குறித்து நின்றது இந்த தலைப்பின்  தேவையை உறுதிப்படுத்தியது.                        

அஸ்ஷேஹ்  யூசுப் முப்தியோடு இனணந்து ஸம் ஸம் அமைப்பின் நிர்வாக இயக்குநர் சகோ. ஹிஸாம் அவர்கள் பல தரவுகளை எடுத்துரைத்ததோடு நிகழ்வுகளை முன்னெடுக்க உறுதுணையாக இருந்தார். 

அத்துடன் MEND அமைப்பின் நிர்வாகி Br. ஸௌகத் அவர்கள் மீடியா உடனான முஸ்லிம்களின் பங்களிப்பும், எதிர் கொள்ளும் சவால்களையும் காணொளி மூலம் கோடிட்டு காட்டினார். இலங்கை முஸ்லிம்களும் இவ்விடயத்தில் தமது பங்களிப்புகளை நல்க வேண்டும் என்று வினயமாக கேட்டுக்கொண்டார்.      
       
மேலும் Dr. றயீஸ் அவர்கள் இளைஞர்கள், குழந்தைகள் விடயத்தில் இளைக்கப்படும் தவறுகளை சிரு உதாரணங்கள் மூலம் விளங்கப்படுத்தியதோடு அதற்கான தீர்வுகளையும் எடுத்துரைத்தார்.                     

இறுதியாக கலந்து கொண்டோர் இந் நிகழ்வு மிகவும்பிரயோசமானதாக அமைந்ததாகவும் ஆனால் ஆரம்பம் என்றதால் இது இன்னும் தொடரவேண்டுமென வேண்டிக் கொண்டனர் . இன்ஷா அழ்ழாஹ் அதை முயற்சிப்போம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மற்றும் இளைஞர்களுக்கான இவ்வாறான ஓர் அமர்வை ஒழுங்குபடுத்தி அவர்களையும் ஓர் அங்கமாக செயற்பட ஆவண செய்தல் எனவும் , ஒவ்வொரு அமைப்பும் ஓர் வருடாந்த கலண்டரை வரைந்து அதில் இளைஞர், பெண்களுக்கான நிகழ்வுகளை உள்வாங்குதல் எனவும்  நடந்த நிகழ்வுகளை தமது அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தி அதனை விரிவாக்கல் எனவும் ஆலோசிக்கப்பட்டது.. இறுதியாக இந்த ஏற்பாடு ஓர் தன்னார்வ( voluntary ) முயற்சி எனவும் ,  இனிவரும் காலங்களில் அனைவரும் ஒன்றினைந்து நடாத்தும் நிகழ்வுகளை முன்னெடுக்க  ஏற்பாட்டாளர்கள் எப்பொழுதும் ஆதரவு நல்கவும் , வசதிப்படுத்தவும் (Facilitate) தயாராக உள்ளதாக தெரிவித்தனர். 

குறித்த நேரம் பிந்தியே நிகழ்வுகள் நிறைவுற்ற போதிலும் , கொரோனா அச்சத்தையும் தாண்டி அனைவரும் இன்னும் தாமதமாகவே அவ்விடத்திலிருந்து வெளியேறினர்.  இந் நிகழ்வை திறம்பட நடாத்த உதவிய எல்லாம் வல்ல அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.     
               வஸ்ஸலாம்.
SLMS-UK - Media Team

0 கருத்துரைகள்:

Post a comment