Header Ads



கொரோனாவினால் 1 இலட்சம் பேர் பாதிப்பு - 3,356 பேர் பலி


உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிப்பட்டோர் எண்ணிக்கை 1 இலட்சத்தை நெருங்குகிறது. உலகில் மொத்தம் 80 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. 

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முதலில் மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் இந்த வைரஸ் பரவி வந்தது. இந்த வைரஸ் கொரோனா வைரஸ் எனப்படும் வைரஸ் குடும்பத்தை சேர்ந்ததாகும். 

இந்த குடும்பத்தில் மொத்தம் 6 வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது புதியதாக ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் குடும்பத்தின் 7 வது வைரஸ் ஆகும். சீனாவை தாக்கிய சார்ஸ் நோய் கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்டததான். 

கொரோனா வைரஸால் பாதிப்பட்டோர் எண்ணிக்கை 1 இலட்சத்தை நெருங்குகிறது. 99,370 பேர் உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிப்பு. சீனாவில்தான் அதிகம்பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . சீனாவில் 85,552 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க 3383 கொரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர் . சீனாவில் மட்டும் 3042 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர். 

அமெரிக்காவை 233 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 12 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள். வாஷிங்டனில் மட்டும் 10 பேர் பலியாகி உள்ளனர். அதே போல் ஈரான் இந்த வைரஸ் தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் மிக வேகமாக வைரஸ் பரவி வருகிறது. அங்கு 3,513 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 107 பேர் இதனால் பலியாகி உள்ளனர். 

ஈரானுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு 3858 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 148 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். அதேபோல் இன்னொரு பக்கம் தென் கொரியாவை இந்த வைரஸ் மொத்தமாக முடக்கி உள்ளது. அங்கு 6248 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். 

இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில், உத்தரகாண்டிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முதல் நாள் டெல்லியில் பேடிஎம் ஊழியர் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது.டெல்லியில் காசியாபாத் பகுதியில் இன்னொரு நபருக்கும் வைரஸ் தாக்கியது நேற்று உறுதி செய்யப்பட்டது.

No comments

Powered by Blogger.