Header Ads



சு,க, யினர் தேர்தலின்பின் Unp யை ஆதரிக்கலாம், பொதுஜன வேட்பாளர்களுக்கு விருப்புவாக்கு வழங்குக

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தாம் கூட்டணி அமைத்திருந்தாலும் அந்த கட்சியினர் பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் மத்தியில் சந்தேகம் இருப்பதாகவும் இதனால், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களுக்கு மாத்திரம் விருப்பு வாக்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் பொதுஜன பெரமுன நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் வாக்காளர்களுக்கு நியாயமான அச்சம் இருக்கின்றது. எம்முடன் தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை பெற்ற பின்னர் அந்த பக்கம் தாவலாம் என நியாயமான அச்சம் இருக்கின்றது. அப்படியில்லை என்றால், சஜித் பிரேமதாசவுடன் எதிர்க்கட்சியில் அமரலாம்.

இதனால், எமது வேட்பாளர்களை வலுப்படுத்துமாறு கட்சியினரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:


  1. தேர்தல் ஒன்று நெருங்கும் போதெல்லாம் பொ ப சேனா மற்றும் முஸ்லிம்கள்
    பிரச்சினை வெளிவர துவங்கிடும் யா அல்லாஹ் இந்த சூழ்ச்சியாளர்கள் அணைவரையும் நாசாமாக்குவாயாக

    ReplyDelete

Powered by Blogger.