Header Ads



SLK குவைத் அமைப்பினால் ஒழுங்கு, செய்யப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டம்:


இலங்கையின் 72 ஆவது  சுதந்திர தினத்தினை கொண்டாடும் முகமாக  The Society of All Sri Lankans in Kuwait (SLK ) அமைப்பு கடந்த ஜனவரி 7 ம் திகதி வெள்ளி அன்று குவைத் , தஸ்மா  பிரதேசத்தில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக குவைத்திற்கான அதிமேதகு இலங்கை தூதுவர் திரு. Mohammed Jauhar அவர்கள் கலந்துகொண்டிருந்தார். அவரோடு சில தூதுவராலய அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சி எமது நாட்டின் சுதந்திர தினத்தினை பிரதிபலிக்கும் வகையில் சில சிறுவர் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

மேலும், எமது SLK சங்கத்தினால் நடாத்தி முடிக்கப்பட்ட “சுதந்திர-தின கோப்பை”க்கான கரப்பந்தாட்ட, கிரிக்கட் சுற்றுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கின்னங்கள், வெற்றிப்பதக்கங்கள் மற்றும் சான்றிதல்கள் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியில் 220 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கலந்து கொண்டிருந்தனர். கலந்து கொண்ட, ஆதரவளித்த, சமுகம் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் SLK தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.


No comments

Powered by Blogger.