Header Ads



MCC ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதில்லை, இலங்கை அரசாங்கம் முடிவு

அமெரிக்காவின் எம்சிசி எனப்படும் மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதில்லை என்று இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அமைச்சரவையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக இன்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும், குறித்த ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு உட்பட்டதல்ல என்பதையும் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எனினும் அப்போதைய எதிர்க்கட்சியான தற்போதைய ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டமையினால் தாமதம் அடைந்தது.

எனினும் புதிய அரசாங்கத்தில் எம்சிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இராணுவ தளபதி சவேந்திரா சில்வாவிற்கு அமெரிக்க பயணத் தடை விதிதுள்ளமை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு பழிவாங்கும் நோக்கில் எம்சிசி உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கை மறுத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.