Header Ads



அது ரவூப் ஹக்கீமின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. JVP

23 ஆம் திகதி கண்டியில் நடந்த ஸ்ரீ லங்காக முஸ்லிம் காங்கிரஸ் மா நாட்டின் போது அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை குறித்த செய்தி ஊடகங்களிலும, சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவிவருகிறது.
அந்த அறிக்கையின் படி மக்கள் விடுதலை முண்ணனி தமிழ் தேசிய கூட்டணி மற்றும் சிவில் அமைப்புகளுடன் கூட்டணி வைக்க தனது கட்சி பரிசீலித்து வருவதாக ஹக்கீம் கூறியுள்ளார். அதற்கான பேச்சவார்தைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் .
இவரின் கருத்து தொடரபில் எந்த உண்மையூம் இல்லை அது வெறுமனே ரவூப் ஹக்கீமின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை முஸ்லீம் காங்கிரசுடன் கூட்டணியாக போட்டியிடுவது குறித்து எந்த பேச்சுவார்தையும் நடைபெறவில்லை என்று மக்கள் விடுதலை முண்ணனி வலியயுறுத்தியள்ளது.
இந்த கட்சிகளுடன் தேர்தல் கூட்டணியை உருவாக்க மக்கள் விடுதலை முண்ணனிக்கு எந்த நோக்கமும் இல்லை.
ஊடக பிரிவு
மக்கள் விடுதலை முன்னணி
2020.02.24

1 comment:

  1. இதுவரை JVPயோடு பேச்சவார்த்தை நடத்தப்படாதிருக்கலாம்.  இன்னும், சிறந்த நோக்குகளைக் கொண்டோருடன் இணைவது JVPயினரின் இயல்பாகும்.

    இது வெற்றிகரமானதும் நீதியை நேசிப்போர்களால் ஆசிக்கப்படக்கூடிய  கூட்டணியாகவும் இருக்கும்.

    எதுவரை என்றால் இனவாத ஹெல உருமய போன்றவற்றை இவர்கள் இணைத்துக் கொள்ளாதவரை -  இவர்களது வெற்றி உறுதி என்று கூறலாம்.

    ReplyDelete

Powered by Blogger.