Header Ads



Dr ஷாபியின் விசாரணைகளை கையாண்ட, பொலிஸ் அத்தியட்சரை விசாரணைக்குட்படுத்த தீர்மானம்

(எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் போதன அவைத்தியசாலையின் முன்னாள் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் வீட்டின் சி.சி.ரி.வி. கமரா காணொளிகள் தொடர்பில், அந்த விவகார விசாரணைகளை முதலில் கையாண்ட  சி.ஐ.டி.யின் முன்னாள் பொலிஸ் அத்தியட்சரும் தற்போதைய பதுளை பிரதிப் பொலிஸ் மா அதிபரின்  தனிப்பட்ட உதவியாளருமான பி.எஸ். திசேராவை விசாரணைக்கு உட்படுத்த சி.ஐ.டி. தீர்மனித்துள்ளது. 

அதன்படி,  நாளைய தினம்பொ- லிஸ் அத்தியட்சர் திசேரா சி.ஐ.டி.க்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக  சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன. 

குறித்த சி.சி.ரி.வி. கமரா காட்சிகளை   பதிவு செய்யும் டி.ஆர்.வி. உபகரணத்தை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப கடந்த பெப்ர்வரை 7 ஆம் திகதி  குருணாகல் நீதிவான் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டார். 

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர்  விஜித்த பெரேரா முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அவர் இந்த உத்தரவை அவர் பிறப்பித்திருந்தார்.

No comments

Powered by Blogger.