Header Ads



அமெரிக்காவுடனான எம்.சீ.சீ. உடன்படிக்கையை இரத்துச் செய்ய முடியாது - உதய கம்மன்பில

எம்.சீ.சீ. உடன்படிக்கையை இரத்துச் செய்ய கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தாலும் ஏற்கனவே இலங்கை அரசு, அமெரிக்காவுடன் அடிப்படை இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளதால், அந்த உடன்படிக்கையை இரத்துச் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாங்கள் எம்.சீ.சீ. உடன்படிக்கைக்கு எதிராகவே இருக்கின்றோம். இதன் காரணமாகவே மக்கள் எமக்கு வாக்களித்தனர். எனினும் ஏற்கனவே எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாக இலங்கை அரசு அமெரிக்காவுடன் அடிப்படை இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

ஆட்சி அமைக்கும் கட்சிகள் மாறினாலும் இலங்கை அரசு மாறாது. உடன்படிக்கையில் கையெழுத்திடுவோம் என இலங்கை அரசு வாக்குறுதி ஒன்றை வழங்கியுள்ளது. அந்த உடன்படிக்கையில் இருந்து விலக வேண்டுமாயின் அதற்கான காரணத்தை தெளிவுப்படுத்த வேண்டும்.

இதற்கு தேவையான பின்னணியை உருவாக்கவே கட்சி பேதமின்றி பேராசிரியர் லலிதசிறி குணருவன் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

உடன்படிக்கையை செய்ய வேண்டாம் என்றே அந்த குழுவினர் ஜனாதிபதியிடம் கூறியிருப்பதாகவே நினைக்கின்றேன். குழு உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் பரிந்துரைத்துள்ளது.

எனினும் அந்த அறிக்கை இன்னும் வெளியில் வரவில்லை. அரசு என்ற வகையில் உடன்படிக்கையில் விலகுவது குறித்து அமைச்சரவை தீர்மானத்தை எடுக்க வேண்டும். கட்சி அப்படியான தீர்மானத்தை எடுக்க முடியாது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அப்படி என்றால் எப்படி நீங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டு பொறுப்பிலிருந்து விலகினீர்கள்। இங்கு அமைச்சரவை அனுமதி, பாராளுமன்ற அனுமதி , ஜனாதிபதியின் அனுமதி ஒன்றுமே பெறப்படாததால் விலகினீர்கள் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் தினேஷ்। அப்படி என்றால் இந்த MCC உடன்படிக்கைக்கும் இன்னும் அமைச்சரவை , பாராளுமன்றம், ஜனாதிபதி இன்னும் அனுமதி கொடுக்கவில்லையே। அப்படி இருக்கும்போது எப்படி இதை கைச்சாத்திடலாம்। பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பது சரிதானே। பணத்துக்காக எல்லா பொய்களையும் பேசும் மோசடிக்காரன்தான் இவன்।

    ReplyDelete

Powered by Blogger.