Header Ads



யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின், எண்ணிக்கையில் வீழ்ச்சி

யாழ். மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் முஸ்லிம், சிங்களவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதாக மாவட்ட செயலக தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு 110 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 366 பேரும், 2 ஆயிரத்து 326 முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 369 பேரும், தமிழர்கள் ஒரு இலட்சத்து 92 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 14 ஆயிரத்து 444 பேரும் வசித்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு 106 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 358 பேரும், ஆயிரத்து 236 முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 919 பேரும், தமிழர்கள் ஒரு இலட்சத்து 92 ஆயிரத்து 711 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 10 ஆயிரத்து 216 பேரும் வசித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு 101 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 335 பேரும், ஆயிரத்து 239 முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 878 பேரும், தமிழர்கள் ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 793 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 11 ஆயிரத்து 249 பேரும் வசித்துள்ளனர்.

1 comment:

  1. (அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள்.

    (அதற்கவர்கள்) “நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள்.

    அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?” என (மலக்குகள்) கேட்பார்கள்;

    எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.

    (அல்குர்ஆன் : 4:97)

    ReplyDelete

Powered by Blogger.