Header Ads



இன, மத பெயர்களை கொண்ட பாடசாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும்

இன, மத பெயர்களை கொண்ட பாடசாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும் எனவும்  வக்பு சட்டம், முஸ்லிம் விவாக விவகரத்து சட்டம் என்பவற்றை திருத்த வேண்டுமெனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை நேற்று (19) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு இன, மத அடிப்படையிலான கட்சிகளின் பதிவை இரத்துச் செய்ய வேண்டுமெனவும் ஆளடையாளத்தை உறுதி செய்ய முடியாத முகமூடிகளை தடை செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழுவின் தலைவர் மலித் ஜயதிலக இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார். இந்தக் குழுவில் 17 உறுப்பினர்கள் உள்ளதோடு எம்.எஸ்.தௌபீக், எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் முஸ்லிம்கள் சார்பில் இதில் அங்கம் வகித்துள்ளனர்.

இந்தக் குழுவின் அறிக்கையில் 13 அம்சங்கள் தொடர்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2 comments:

  1. @Ajan இதற்குள்

    தமிழ் தேசிய கூட்டமைப்பு,
    தமிழ் முற்போக்கு கூட்டணி,
    கொழும்பு இந்து கல்லூரி,
    யாழ் இந்து கல்லூரி,
    தமிழ் வித்தியாலயங்கள்,
    இப்டி தமிழனுக்கு ஆப்பாகவும் பல விடயங்கள் உண்டு. அதன் பின்பு தமிழ் தேசியம் என்கிற பெயரை உச்சரித்தாலே உங்கள் தோளை உரிப்பார்கள்

    ReplyDelete

Powered by Blogger.