Header Ads



அமைச்சர்களுக்கு முன் துணிகரம் - சிங்கள சகோதரிக்கு குவிகிறது பாராட்டு (வீடியோ)


வனம், வனஜீவிகள், இயற்கை தொடர்பிலான முக்கியத்துவம் விளங்காத மங்குனி அமைச்சர் முன்னால்...

ஒட்சிசன் என்றால் என்னவென்று அறியாத மாங்கா மடையன் முன்னால்...

தங்கள் சக அலுவலர் பேசுவது சரியென தெரிந்தும் அவருக்காகவும் இயற்கைக்காவும் பேச முடியாது மௌனிகளாய் இருக்கும் சக அலுவலர்கள் முன்னால்...

அரச ஊழியரை அவமதித்து காடையன் ஒருவன் பேசுவதை தடுத்து நிறுத்தும் சக்தியற்றிருக்கும் காவல்துறை முன்னால்....

எக்காரணம் கொண்டும் இயற்கை நீதிக்கும், நாட்டின் நீதிக்கும் எதிராக தன்னால் செயற்பட முடியாது என தைரியமாக உரத்துக்கூறும் நீயும் ஒரு சிங்கப்பெண்தான்...

வாழ்த்துகள் சகோதரி... இவரைபோலவே சகல அரச ஊழியர்களும் முதுகெலும்புடன் செயற்பட்டு அரசியல்வாதிகளின் அதிகாரத்துக்கு பயப்படாது சட்டம் கூறியவாறு செயற்பட்டால் ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் குறையும்.

வீடியோ இணைப்பு: https://youtu.be/q1A2Cijz0sM

AB Nidal

2

தென்னிலங்கை அமைச்சரின் ஒருவரின் உத்தரவினை ஏற்று நடக்க முடியாது என மறுப்பு வெளியிட்ட பெண் அதிகாரிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்பினை அழித்து அனுமதியற்ற நிர்மாணப்புகளுக்கு இடம் வழங்க முடியாதென அரச அதிகாரியான தேவானி ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்ட தேவானி ஜயதிலக்க முன் மாதிரியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது ஆதரவு வழங்கியவர்களுக்கு முன்னிலையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை மதித்து செயற்படும் நேர்மையான அதிகாரியான தேவானி ஜயதிலக்க கருத்து வெளியிடுகையில்,

அரச காணிகளை பல்வேறு மனித செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதன் மூலம் ஒக்ஸிஜனிற்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கருத்து வெளியிட்ட முறையானது அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளதென பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

3 comments:

  1. This young lady government official should be nominated for an international award for defending the enviornment and mangrove vegetation in Sri Lanka, Insha Allah. This stand taken by this young lady government Gampaha District Forest Officer to allow a proposal to construct a playground in the Kadolkele mangrove of the Negombo lagoon, spearheaded by political stooges in the presence of the State Minister of Fisheries and Inland Fisheries at an official meeting should be the example that all government servants/officials should take as a guiding light in the discharge of their duties to the "MAATHRUBOOMIYA".
    HE. Gotabaya Rajapaksa should be brought to notice about the courageous stand of this young lady official and necessary steps should be taken not to allow her to be penalized politically. Well the community needs a playing ground and the children need a place to play as argued by the citizens, but not at the cost of the enviornment. Another suitable place can be found and allocated for thst by this DDC and the State Minister.
    Noor Nizam - "Convener " The Muslim Voice" and SLPP Stalwart.

    ReplyDelete
  2. SHE MUST GET READY TO GET A TRANSFER ORDER TO SOME JUNGLE AREA LIKE WILPATHU OR MONRAGALA.POOR LADY.

    ReplyDelete
  3. visit to kattankudy and see how hizbullah has filled the batticaloa lagoon by garbage and made playground with support of urban council and MOH kattankudy

    ReplyDelete

Powered by Blogger.