Header Ads



முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புக்காக, பிரதான இடங்களில் புர்கா பாவிப்பதைத் தவிர்ப்பது நல்லது

( ஐ. ஏ. காதிர் கான் )

   முஸ்லிம் பெண்களின் புர்கா தொடர்பில், சில பேஷ் புக் நிறுவனங்கள் என்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப்பிரசாரங்களை முற்று முழுதாக தான்  நிராகரிப்பதாகவும், இது என்மீது வேண்டுமென்றே சுமத்தப்படும் பழி என்பதால், இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு யாரும் ஏமாற வேண்டாம் என்றும், முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா (பா.உ.) பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தனியார் தொலைக்காட்சி  நிறுவனமொன்றில் (17) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, பைஸர் முஸ்தபா இவ்வாறு கேட்டுள்ளார். 

   அவர் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, 

   சில வெப் தளங்கள், எனது கலந்துரையாடலில் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்து, அதனைத் திரிவுபடுத்தி, பேஷ்புக் மூலமாக பொய்ப் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.    என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. நான் அங்கு கூறாத ஒன்றைத் திரிவுபடுத்தி அவற்றை வைரலாக்கி வருகின்றன. என்மீது சேறு பூசும் விதத்திலேயே இவ்வாறான பொய்ப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக நான் அறிகிறேன்.   இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு யாரும் ஏமாற வேண்டாம் எனக்கேட்டுக் கொள்கின்றேன்.

    நமது முஸ்லிம்  கலாசாரம் தமிழ், சிங்களம் மற்றும்  கிறிஸ்தவ கலாச்சாரத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. இதனால்தான்  பலர் நம்மை மாறுபட்ட கண்களால் பார்க்கின்றனர். 

   அரசியலை விடவும் முஸ்லிம் சமூகத்தினர் எமது மதம், எமது போதனைகள், எமது கலாசாரம் போன்றவை தொடர்பில் ஏனையோருக்கு தெளிவூட்ட வேண்டும் என நான் எண்ணுகிறேன். நாம் அணியும் ஆடை தொடர்பில் பெரும் பயமொன்று அவர்களுக்குள் இருக்கிறது.  இப்போது, ​​நம் முஸ்லிம்களில் அநேகர் தொப்பி அணிந்து தாடி வளர்க்கிறார்கள். இது தவறல்ல.  ஆனால், ஒரு சிலருக்கு முஸ்லிம் பெண்கள் தொடர்பில் பிரச்சினை உள்ளது. அவர்களைக் கண்டால், எப்படியோ ஏதாவதொரு சிக்கலை தூக்கி வாரிப்போடுவார்கள். முஸ்லிம் பெண்கள் தலை முடியை மறைப்பார்கள். உடல் மறைய  ஹிஜாப் அணிவார்கள். நாம் இவ்வாறு இருக்க, முஸ்லிம் பெண்கள் மாத்திரம் ஏன் இவ்வாறு இருக்கிறார்கள் என சிலர் நினைக்கிறார்கள். இது போன்றவர்களுக்கு கட்டையாக உடை அணிந்து, உடம்பில் எந்தப் பாகத்தைக் காட்டினாலும் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை. எனவே, எவராவது ஒருவருடைய சுதந்திரத்திற்கு  தடையாக இல்லாமல் இருந்தால், அவருடைய கலாசாரத்தைப் பின்பற்றுவதற்குரிய உரிமை அவருக்குண்டு என நான் நினைக்கிறேன்.

    முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக நான் எப்பொழுதும் முன்நிலை வகிப்பவன். அவர்களின் உரிமைகளுக்காகவும் என்றும் குரல் கொடுப்பவன். முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து பாதையில் செல்ல வேண்டாம் என்றோ அல்லது முற்றிலும் அணிய வேண்டாம் என்றோ நான் ஒருபோதும் கூறியதில்லை. அப்படிக் கூறவும் மாட்டேன். ஆனால்,  முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக, பிரதான இடங்களில் புர்கா பாவிப்பதைத் தவிர்ந்து நடப்பது நல்லது என நான் நினைக்கிறேன். எமது மதக் கலாசாரத்தைப் பாதுகாப்பது, எமது உரிமையும் கடமையுமாகும் என்பதையும்  நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

5 comments:

  1. bankruptcy of your politics. You cannot fight for our rights.so, now defensive politics.

    ReplyDelete
  2. He is a betrayer in our community.

    ReplyDelete
  3. அன்றைய காலகட்டத்தில் எமது முன்னோர்கள் எங்கள் உரிமைகளுக்காக எத்தனையோ நியாயங்களை செய்து முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடு இருக்கிறார்கள் ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாக தான் நடக்கின்றது.

    ReplyDelete
  4. http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_123.html

    ReplyDelete

Powered by Blogger.