Header Ads



உலகை அச்சுறுத்தும் வெட்டுக்கிளி, இலங்கையிலும் பரவும் ஆபத்து

உலக நாடுகள் பலவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் லோகஸ்ட் என்படும் காட்டு வெட்டுக்கிளிகள் இலங்கைக்கும் வரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆபிரிக்க நாடுகள், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இந்த வெட்டுக்கிளிகளின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காற்றின் திசை மாறுதல், மற்றும் இலங்கையின் காலநிலை மாற்றம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் இயக்குனர் நாயகம் விஜேசிரி வீரகோன் தெரிவித்துள்ளார்.

இந்த வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் அண்மையயில் அவசர நிலை ஒன்றை அறிவித்தார். இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இந்த வெட்டுக்கிளி பரவியுள்ளது.

இந்தியாவில் சுமார் 70,000 ஹெக்டேர் அளவில் வெட்டுக்கிளிகள் பரவியுள்ளன. வரலாற்றில் முதன்முறையாக மிக மோசமான பூச்சியின் தாக்கத்திற்கு விவசாயம் முகம் கொடுத்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த வெட்டுக்கிளிகள் பரவினால் விவசாயத்திற்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் இந்த வெட்டுக்கிளிகள் 150 கிலோமீற்றர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

விசேடமாக பச்சை நிறத்திலான பயிர்களை நோக்கியே இந்த வெட்டுகிளிகளின் படையெடுப்புகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.