Header Ads



மாவத்தகம பிரதேச எதிர்க்கட்சி தலைவர் ரிபாழ், பொதுஜன பெரமுனாவில் இணைவு

குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், மாவத்தகம பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவருமான முஹம்மட் ரிபாழ், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனாவில் இணைந்து கொண்டார்

குருநாகல் மாவட்ட சிங்கள வர்த்தக சங்கம் மற்றும் முஸ்லிம் வர்த்தசாங்க உறுப்பினர்களுடன் நேற்று (11) இரவு குருநாகல் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சமகால அரசியல் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வொன்று ஆளுநரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போதே, ஐக்கிய தேசிய கட்சியின் மாவத்தகம பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் முஹம்மட் ரிபாழ் முஸம்மில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனாவில் இணைந்து கொண்டார்

நீண்ட காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் மாவத்தகம பிரதேச சபை உறுப்பினராகவும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராகவும் முஹம்மட் ரிபாழ் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் விகாராதிபதி ரேகவ ஜினாரத்ன தேரர், குருநாகல் மாநகரசபை முதல்வர் துஷார சஞ்சீவ, இப்பாகமுவா பிரதேச சபை தவிசாளர் யு.கே. சுமித், வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் சட்டத்தரணி அதுல விஜேசிங்க உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

1 comment:

  1. குருநாகல் மாவட்ட இனங்கள் அரசியல் மற்றும் மதவாதிகளால் துருவங்களாக்கப்பட்டுள்ளார்கள்.முஸம்மில் அல்ல அவருடைய தாத்தா வந்தாலும் சரிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.