Header Ads



திருகோணமலையில் இப்படியும் சிக்கல்

- ஹஸ்பர் ஏ ஹலீம் -

திருகோணமலை ஐக்கிய பொதுச் சந்தை வளாகத்தில் வாராந்த சந்தை நடைமுறை தொடக்கி வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சந்தை வர்த்தகர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை இன்று 2020.02.02 ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு முன்னால் மேற்கொண்டனர்.

வியாபாரம் சூடுபிடித்த நிலையில் வர்த்தகர்களும், சந்தைக்கு வந்த பொதுமக்களும் பொலிசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மத்திய பொது சந்தை வர்த்தகர்களினால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சந்தை நடவடிக்கையை நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் நகர சபை தலைவருக்கு கடிதமும் வழங்கப்பட்டது.

வாராந்த சந்தையில் மரக்கறி உற்பத்திக்கும், உள்ளூர் உற்பத்திக்கும், ஏனைய பொருட்களும் விற்பதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தது. மீன், இறைச்சி விற்பனை தடுக்கப்பட்டு இருந்தது.

வாராந்த சந்தையில் விற்பனை நடவடிக்கைக்காக 200/= அறவிடப்பட்டு இருந்தது. அப்பணம் வியாபாரிகளுக்கு மீள் வழங்கப்பட்டது.

இதனால் சந்தையில் வியாபாரங்கள் இடம்பெறவில்லை.சந்தையை சுற்றி கறுப்பு கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தது. திருகோணமலை மின்சார நிலைய வீதியில் 1997ம் வருடம் மாசி மாதம் 27ம் திகதி நகர சபைத் தலைவர் பெ.சூரியமூர்த்தியினால் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது.

65 இலட்சம் மதிப்பீட்டில் வேலைகள் நிறைவடைந்த போதிலும் இங்கு அரசியல் காரணங்களால் வியாபார நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டு இருந்தது. பின்னர் இது இராணுவ முகமாக இயங்கி வந்தது.இராணுவம் அகன்று சென்ற பின்னர் வெறுமையாக இருந்த இவ்வளாகத்தில் வாராந்த சந்தையை அமைக்க சபை தீர்மானித்து முதல் வாராந்த சந்தை இன்று ஞாயிற்றுக்கிழமை 2020.02.02 தொடக்கி வைக்கப்பட்டது.

நாட்டின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வாராந்த சந்தை நடைபெற்று வருகிறது. ஆனால் திருகோணமலை நகரில் இச்சந்தை நடத்தப்படுவதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இன்னொரு சந்தை நடைபெற்றால் இன முறுகல் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் பலவாறு எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.

No comments

Powered by Blogger.