Header Ads



ஹஜ் முகவர்களுக்கு எவ்வித, முற்பணமும் செலுத்த வேண்டாம்


பிரதம அமைச்சர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், ஹஜ் குழுவின் தலைவர் மற்றும் ஹஜ் முகவர்களின் சங்கங்களுக்கிடையே கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

பிரதமருடனான உடன்பாட்டின்படி குறிப்பிட்ட மூன்று விலை மட்டங்களின் அடிப்படையில் திணைக்களம் வரையறை செய்கின்ற வசதிகளை ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்க முன் வருகின்ற முகவர்களுக்கு மாத்திரமே ஹஜ் முகவர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். அதனடிப்படையில் குறிப்பிட்ட முகவர்களுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கையின் பிரகாரம் ஹஜ் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.  

இவ்விரு முக்கிய நிபந்தனைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும். இந்த வகையில் அனைத்து ஹஜ் முகவர்களும் விளம்பரங்கள் செய்வதிலிருந்தும் பணம் சேர்ப்பதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளவும். 

ஹஜ் யாத்திரிகர்கள் எந்தவொரு இடைத்தரகர்களையும் அனுக வேண்டாம். இது வரை ஏதேனும் முகவருக்கு முற்பணங்கள் செலுத்தியிருப்பின் ஆதாரத்துடன் திணைக்களத்திற்கு அறியத்தரவும். 

ஏ.பீ.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
17.02.2020

1 comment:

  1. நல்லதொரு முயற்சியும், எடுத்துக்காட்டும். இதுவரை இருந்துவந்த ஹஜ் ஏஜென்ட் மந்தி(ரி)களின் கமிசன் தான் முதலில் கட்டவேண்டும் என்ற கலாசாரத்தை மாற்றுவதற்கு புதிய பணிப்பாளர் மேற்கொண்ட துணிகரமான முயற்சிக்கு எமது மனமுவர்ந்த பாராட்டுகள்.உங்கள் துணிகரமான பணிகளும் தொடர எமது பிரார்த்தனைகள்.

    ReplyDelete

Powered by Blogger.