Header Ads



ஸ்ரீலங்கா அதளபாதாளத்திற்குச் செல்வதற்கு, மங்கள சமரவீர தான் காரணம்

ஸ்ரீலங்கா என்னும் தேசம் அதளபாதாளத்திற்குச் செல்வதற்கு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தான் காரணம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் 6 உரையாற்றிய முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர,

ஆட்சிப் பொறுப்பினை ஏற்றவுடன், அரசாங்கமானது பெரும்பாலான வரிகளை குறைத்தது. இதனால் நாடு பெரும் பொருளாதார சரிவினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அது மாத்திரமல்லாது அரசாங்கம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது.

உண்மையில் தற்போதுள்ள சூழலில் வரிக் குறைப்பானது பொருத்தமற்ற செயலாகவே அமைந்திருக்கிறது. நிதிப் பற்றாக்குறையினால் அரசாங்கத்தினால் அடுத்த வேலைகளை செய்ய முடியாமல் இருக்கிறது.

இந்நிலையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது.

இதேபோன்று தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் வரவு செலவுத்திட்டத்தை காணமுடியவில்லை. அதனை சமர்ப்பிக்கும் நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை. நாட்டு மக்கள் பெரும் நெருக்கடியினை சந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் மஹிந்த அமரவீர,

இன்று நாடு இவ்வளவு பெரும் பாதாளத்திற்குள் சிக்கித் தவிப்பதற்கு முன்னைய அரசாங்கமும், முன்னாள் நிதியமைச்சருமே முழுமையான காரணம். அவர்கள் தேவையற்ற வரிகளை அறிமுகப்படுத்தி மக்களின் முதுகில் பாரிய சுமைகளை ஏற்படுத்தினார்கள்.

மங்கள சமரவீர நிதியமைச்சராக இருந்த போதும், எந்தவிதமான முன்னேற்றமான செயல்பாடுகளும் இடம்பெறவில்லை. அத்தோடு, அவரின் செயல்பாடுகளினால் மக்கள் எந்தப் பயனையும் அனுபவிக்கவில்லை.

மாறாக புதிய வரிகளை அறிமுகப்படுத்தினார். ஆனாலும் எவரும் அந்த வரிகளை கட்டவில்லை. மக்களை நசுக்கும் செயல்பாடுகளையே அவர்கள் செய்தார்கள் என்றார்.

1 comment:

  1. ஒரு கள்வனாவது ஏதாவது ஒரு உண்மையைச் சொன்னால் மற்ற கள்வன் அதனை அப்படியே முடக்கிவிட எத்தனிக்கின்றான்.

    ReplyDelete

Powered by Blogger.