Header Ads



புத்தளம் முஸ்லீம் பிரதிநிதித்துவம் பெற, வடக்கு முஸ்லீம்கள் உதவ வேண்டும்

1990 ஆண்டு வடக்கிலிருந்து புலிகளினால் ஆயூத முனையில் முஸ்லீம்கள்  பலவந்தமாக  வெளியேற்றப்பட்டார்கள். இவ்வாராக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களில் இருந்து 75000 --- 80000 முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். 

இவர்களில் சுமார்  65000 முஸ்லீம்களை தன்னகத்தே வாழ்விடமளித்த பூமி புத்தள மண்ணாகும்.

வெளியேற்றப்பட்ட மக்கள் தொகையில் 80/ சதவீத மானவர்கள் புத்தளம் அடைக்கமளித்தது. இத்தொகை இம்மாவட்டத்தின் 8/  சதவீதமாக காணப்பட்டது. இவ்வாறாக இவர்களை அல்லாஹ்வினுடைய தூய கலிமாவாகிய லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ர ஸுலுல்லாஹீ என்ற கலிமா ஒற்றுமைப்படுத்தி அடைக்களம் வழங்கியது .அல்ஹம்துலில்லாஹ். 

எல்லா நிலைகளிலும் தம்மாலான சகல உதவிகளையும்  ஒத்தாசைகளையும் வழங்கியமைஇன்னும் மறக்க முடியாத சம்பவங்களாகும். இவ்வாறாக காலச்சக்கரம் உருண்டோடியது வாழ்க்கை முறையிலும் நடைமுறையிலும் குறிப்பாக வடக்கு முஸ்லீம்களில்  மாற்றங்கள் காணப்பட்டன.இது இவ்வாறாக இருந்தாலும் யாழ்ப்பாண, கிளிநொச்சி  மக்களின் உரிமைக்கான வாக்கு வங்கிகள் என்பது புத்தளத்தில் சுமார் பன்னிரண்டாயிரங்கள்  கொண்டுள்ளதை அவதானிக்கின்றோம்.

இதே போன்றே வன்னி மக்களின் வாக்குப்பலமும் புத்தளத்தில் உள்ளது. இச்சந்தர்ப்பத்தில்  இம்முறை நாடாளுமன்ற தேர்தல் முஸ்தீபுளும், ஏற்பாடுகளும் ஆங்காங்கே பலரும் வியூகங்கள் வகுப்பதையும் திட்டங்கள்               பாேடுவதிலும், கட்சிப்போராளிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும், கட்சித்தலைமகைள் கூட்டங்களை நடத்துவதையும் காணக்கூடியதாக இருந்து கொணடிருக்கிறது.  

முப்பது வருடங்களாக பாராளுமன்றத்தின் பிரதிநிதித்துவத்தை இழந்த நிற்கும் இந்த புத்தள மாவட்டத்தின்  பங்காளிகளாக இன்று வேரூன்றி நிற்கும் குறிப்பாக யாழ்முஸ்லீம், கிளிநொச்சி, வன்னி மக்களாகிய எம்மவர்கள் இம்முறை இதற்கான பொது தீர்வுத்திட்ட ஏற்பாடுகளையும் , இதற்கான மும்முனைந்து செயல்படுவதையும் காணலாம். 

எனவே எம்மவர்களது வாக்குப்பலத்துடன் கருத்து வேறுபாடின்றி ஒருமித்து செயல்பட்டு எம்மை வாழவைத்த இப்புத்தளப் பூமியிலிருந்து பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டிய காலகட்டமிது.எனவே தொடர்ந்து முப்பது வருடமாக சிறுபான்மைப்பிரதிநிதித்து வத்தை இழந்து வரும் இம்மாவட்டத்தில்  நாம் கட்சி வேறுபாடின்றி பல கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் பிரிந்து நின்று எமது கட்சி,  எமது   சின்னம் எனப்பிரியாது  ஓரணியாக ஒருமித்து  களமிறக்கினால் இன்ஷா அல்லாஹ் எமது புத்தளத்தின் பிரதிநிதுத்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

பல களஆய்விவுகளில் முடிவுகளில் இதுவே கூடுதலான சாத்தியப்பாட்டிற்கு ஏதுவானதாகவுள்ளதை அவதானிக்கமுடிகின்றது.

மேலும் சமகால அரசியல் நிலவரங்களையும் இன்னும்  தெளிவாக ஆராய்ந்து கொள்ளுமாறும் இதற்காக  தங்களது கௌரவமான சிந்தனைகளயைம், அறிவாற்றல்களையும் , ஒற்றுமைப்படுத்தி செயல்படுத்துமாறு அன்பாக முன்வைக்கின்றோம். இது  விழிப்புணர்வை நோக்கிய பயணமாகும்.  

புத்தள வாழ் யாழ்,கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனம். 

தலைவர் அப்துல் மலிக் மௌலவி 

செயலாளர் ஹஸன் பைறூஸ்

1 comment:

  1. முக்கியமான கோரிக்கை. புத்தளம் மாவட்ட தமிழ் வாக்குகளும் வடபகுதி முஸ்லிம்களின் வாக்குகளும் கைகொடுத்தால் மட்டுமே புத்தளம் முஸ்லிம் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும். இந்த பின்னணியில் தலைவர் அப்துல் மலிக் மெள்லவியின் வேண்டுகோள் முன்னைநாள் அமைச்சர்கள் றிசாட் பதிதியூனுடனும் மற்றும் மனோ கணேசனுடனும் அரசியல் பேரம்பேசி பெற வேண்டிய நல்ல காரியமாக உள்ளது. புத்தளம் முஸ்லிம் வேட்பாளர்களும் றிசாட் பதியூனதும் மனோகணேசனதும் ஆதரவாளர்களும் ஒரே பட்டியலில் போட்டி இடமுடிந்தால் வெற்றி நிச்சயம்.

    ReplyDelete

Powered by Blogger.