Header Ads



நீச்சல் குளத்தில் குளித்தால், பெண்கள் கர்ப்பமாவார்களா...?

நீச்சல் குளத்தில் பெண்கள் குளிப்பதன் மூலம் கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாக இந்தோனேஷிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவில் பெண்கள் குறுகிய வயதில் கர்ப்பமாவது அதிகரித்து வருகிறது.

இதனால் இது குறித்து அந்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியான சிட்டி ஹிக்மாவாட்டே என்ற பெண் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

அதில், அவர் ஆண்கள் நீச்சல் குளத்தில் குளிக்கும்போது விந்தணுக்களை வெளியேற்றினால், அவை தண்ணீரில் கலந்துவிடுகிறது.

பின்னர், அதே நீரில் பெண்கள் குளிக்கும்போது தண்ணீரில் கலந்த விந்தணுக்கள், பெண்ணுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. இதனால், உடலுறவு இல்லாமலேயே பெண்கள் கர்ப்பமாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் பேட்டியளித்திருந்தார். ஹிக்மாவாட்டேயின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத இந்த கருத்தினை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

1 comment:

  1. அறிவியலில் இது ரொம்ப சாத்தியம், நிரூபிக்க பட்டுள்ளது. தெறியாதவர்களுக்கு இது புதுமை.
    தந்தை குளித்துவிட்டு போட்ட ஈரச்சாரமை கட்டிக்கு உடுத்த மணமாகாத மகள் கர்ப்பமடைந்ததில் மேற்கொண்ட ஆய்வில் இவ்வுண்மை தெறியவந்தது இற்றைக்கு 35 வருடத்திற்கு முன்னர்.
    அப்போ எங்கு விடயமுள்ளது நாம் எங்குள்ளோமென சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.