Header Ads



லண்டனில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர், இலங்கையுடன் தொடர்பு பட்டவரா..?

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவேளை காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட  சுடேஸ்அமானிற்கு இலங்கையில் குடும்பத்தவர்கள் உள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுடேஸ் அமானின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

சுடேஸ் மமூர் பர்சார் அமான் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த பிரசுரங்களை இணையத்தில் ஊக்குவித்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்,தனது காதலியை அவரின் பெற்றோரின் தலையை துண்டிக்குமாறு ஊக்குவித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் ஒருமுறை இணையத்தில் தனது இலட்சியங்களை பதிவு செய்திருந்தார் அதில் மாவீரனாக  மரணிப்பதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டனில்  தனது தாய் மற்றும் நால்வர் சகோதரர்களுடன் ஹரோவில் வாழ்ந்த வேளை தனது 17 வயதில் அவர் முதன் முதலில் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடதொடங்கினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்பிரல் 2018 இல் அவரது நடவடிக்கைகளை அறிந்த காவல்துறையினர் மே மாதத்தில் அவரை கைதுசெய்துள்ளனர்.

அவ்வேளை அவரது கணணியையும் கையடக்க தொலைபேசியையும் ஆராய்ந்த அதிகாரிகள் சுடேஸ் அமான் குண்டுகளை தயாரிப்பது,பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வது குறித்த ஆவணங்களை தரவிறக்கம் செய்துள்ளதை கண்டுபிடித்தனர் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் தாயாரின் சமையலறையில் எவ்வாறு குண்டுகளை தயாரிப்பது,இராணுவ கத்தியை பயன்படுத்தி போரிடுவது, பிரேசில் கத்தியை பயன்படுத்துவது போன்ற விடயங்களை அவர் தரவிறக்கம் செய்துள்ளார் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

அமான் தனது குடும்பத்தவர்கள்,நண்பர்கள், காதலியுடன் தனது தீவிரவாத கொள்கைகள் குறித்து கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட்டார்,கத்தியை பயன்படுத்தி தனது தாக்குதலை மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் காதலியுடனான இணைய உரையாடலின் போது நீங்கள் ஐஎஸ் அமைப்பிற்கு விசுவாசமாகயிருப்பதாக சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளதாகவும்,அசிட் தாக்குதலை மேற்கொள்ளப்போவதாகவும் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள் என அமானிடம் நீதிபதி தண்டனை வழங்கியவேளை தெரிவித்திருந்தார்.

குண்டுகளை விட நீங்கள் கத்தியை பயன்படுத்த விரும்புகின்றீர்கள் உங்கள் வீட்டிற்கு கத்தி விநியோகிக்கப்படுவதை விரும்பினீர்கள் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

டிசம்பர் 2017 இல் அமான் ஐஎஸ் அமைப்பின் தலைவரின் படத்தை பதிவு செய்திருந்தார் எனவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

இன்னொரு செய்தியில் அவர் தனது காதலியை அவரின் பெற்றோர்களின் தலையைதுண்டிக்குமாறு கேட்டுக்கொண்டார் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன

Streatham terrorist Sudesh Amman as an innocent little boy

Terrorist Sudesh Amman asked his mother for his favourite mutton biryani meal just hours before he was shot dead by police in London, she revealed today as it emerged she was left 'disgusted' by the terror attack.
Haleema Khan, 41, of Dunstable, Bedfordshire, learned about both yesterday's attack in Streatham and her son's death from TV news, having spoken to him on the phone earlier in the day when he asked for the meal.
It comes as Mrs Khan revealed three pictures of Amman as a boy - shirtless and pulling a face while playing on the pavement; posing with a neck chain while eating with a fork; and holding a vacuum cleaner.
She described her son as a 'lovely boy' as she fought back tears today while telling MailOnline how she felt he was radicalised at HMP Belmarsh in Thamesmead, South East London. The top-security jail has been home to a number of high-profile extremist prisoners, including Lee Rigby killers Michael Adebolajo and Michael Adebowale. 
Mrs Khan said Amman had also developed extreme views after looking at Islamist material online. She is now trying to get her son's body from police as soon as possible to bury him. 
Amman lived with Mrs Khan and his five younger brothers in Harrow, North West London, before he was jailed for terror offences at the Old Bailey in December 2018. 
A family source said Mrs Khan was 'disgusted' by yesterday's attack, although neighbours said she had been convinced of her son's innocence even after he was convicted.
Mrs Khan told MailOnline today: 'He wasn't even a very devoted Muslim. He got radicalised while he was in Belmarsh Prison (in Thamesmead, South East London).
'He got into all this (supporting terrorism) on the internet, but when he went to prison something happened to him.'
She said she saw him twice last week in a bail hostel in Streatham, South London, and last on Thursday where he was staying at following his release.
Fighting back tears, Mrs Khan said she had taken him food and that he had not mentioned anything about carrying out a terrorist attack.

2 comments:

  1. இவன் பெயரை பார்க்கும் பொது அரேபியா நாட்டு பூர்விகமாக தோன்றுகிறது.
    முடியுமானவர்கள் இதன் உண்மை தன்மையை அறிந்து தெளிவு படுத்துவது நமது சமூகத்தின் பாதுகாப்பிட்கு அவசியம்.நமது நாட்டு சகோதரர்கள் UK இல் வாழ்கிறார்கள் என்பதை கவனிக்கவும்.

    ReplyDelete
  2. No need to worry too much, he is look like drugs addicted guy, didn't learn islam properly, just involved to learn with bad companion,

    ReplyDelete

Powered by Blogger.