Header Ads



இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்கள் எந்தவித, அச்சுறுத்தலுமின்றி வாழ்ந்து வருகின்றனர் - பாரிஸ்

கண்டி மாநகரில் அறிஞர் சித்திலெப்பையினால் தோற்றுவிக்கப்பட்ட பாடசாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாடசாலையாகும். அவர் இந்நாட்டில்  முஸ்லிம்களுடைய கல்வி மறுமலர்ச்சிக்காகவும் முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டுக்காகவும் உயிர் மூச்சாகத் திகழ்ந்தவர். அவர் நாமத்தில் இயங்கும் பாடசாலையை மிகச் சிறந்த முறையில் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். அதன் மூலம் அவருக்கு பெருமையை சேர்ப்;பதுடன் அவருடைய சேவையை மேலும் பேணி நடப்பதற்கான கடப்பாட்டை வலியுறுத்தி முன்னெக்க வேண்டும் என்று; கண்டி வட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் அமைப்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் தெரிவித்தார்.
கண்டி சித்திலொப்பை மஹா வித்தியாலயத்தில் 60 இலட்சம் ரூபா செலவில் கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் அமைப்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் அவர்களின் சொந்த நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ள கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசாங்கத்தினால் 4 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அதிபர்  ஏ. ஜீ. எம். தமீம் தலைமையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் 
இப் பாடசாலையின் நாமதுக்கு உரியவர் யார்? அவருடைய சிறப்பு என்ன ? என்பவற்றை இடை போட இப்பாடசாலை நமக்கு வழிவகுத்துள்ளது. முஸ்லிம் சமூகத்தின் பெருமைக்கு சான்;று பகர்கின்றது. எனவே இப்பாடசாலையை  கட்டி எழுப்பி வளப்படுத்த வேண்டிய பொறுப்பு நமது எல்லோருக்கும் உண்டு.  இப்பாடசாலை உயர்ந்தால் நம் மாணவர் சமூகத்தின் தலை நிமிரும். அறிஞர் சித்திலெப்பையின் பெருமை, வளம், அனைத்தும் சீர் பெறும்.  இப்படிப்பட்ட அறிஞர்களின் நாமத்தை மேலோங்கச் செய்வதற்கு அரசியல் பலம் மிகவும் அவசியம். அந்த வகையில் ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து  செல்வதன் மூலம்தான் பிரதிபலன்களையும்  பேறுகளையும் அடைந்து கொள்ளலாம். 

கடந்த காலங்களில் எமது பாதகாப்புத் தொடர்பாக அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. ஆனால் இந்த அரசாங்கத்தின் வருகையின் பால் எந்தவிதமான அச்சுறுத்தலுமின்றி முஸ்லிம்கள் வழக்கம் போன்று சகல மக்களுடனும் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர் என்கின்ற உண்மை நிலை நாம் எல்லோரும் உணர்ந்தவர்களாக இருக்கின்றோம்.
எமது மாணவர் சமூகத்துக்கு கல்வி வளத்தை சீராக வழங்குவதன் மூலம் அறிஞர் சித்திலெப்பையின் சிந்தனையின் இலக்க எட்டுவதற்கும் எம்முடைய இருப்புக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை இயல்பாகவே பெற்றுக் கொள்ளுவதற்கும் தற்போது நல்லதொரு பாதை திறக்கப்பட்டுள்ளது.  அதற்காக ஆளும் தரப்பில் ஒரு பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநித்துவம் அவசியமாகும்.  அந்தப் பாராளுமன்றப் பிரநிதித்தவத்தை கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் மிக இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம். எனவே  இதற்கக முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்பட என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கண்டி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. ஆர். எம். அமீன், தொழிலதிபர் ஹம்சா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 
இக்பால் அலி
24-02-2020

1 comment:

  1. Mr.பாரிஸ் அம்பணச்சி கெடச்சும் ஆனால் சுணங்கும் ( பொது தேர்தலின் பின்)
    இலங்கை முஸ்லிம்கள் என்பது நீங்களும் உங்கள் குடும்பமும் அல்ல!

    ReplyDelete

Powered by Blogger.