Header Ads



போருத்தொட்ட அல்பலாஹ் கல்லூரியில் இடம்பெற்ற மாணவர் பரிசளிப்பு நிகழ்ச்சி


அஸ்ஸலாமுஅலைக்கும்.
நேற்று 16 /02/2020 ,ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு போருத்தொட்ட அல்பலாஹ் கல்லூரியில் இடம்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் கணணியரை (கம்பியுட்டர் வகுப்பரை) ஆரம்பித்தல் மற்றம் 10 இலட்ச ரூபா பெறுமதியான கம்பியூட்டர்கள் பாடசாலைக்கு கையளித்தல் போன்ற நிகழ்ச்சிகளில் விஷேட அதிதியாக வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த மற்றும் முன்னால் மேல்மாகாண சபை உருப்பினர் M S M ,சகாவுல்லா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
  Gce O/L , Gce A/L,  (3A )தரம் 5  .போன்ற பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று  தேர்ச்சிபெற்ற  மாணவர்களுக்கா ன பரிசளிப்பும். யுனிவர்சிட்டி  தேர்வடைந்த மாணவர்களுக்கும்  பாராட்டி பரிசில்கள் வழங்கப்பட்டது.
 அல்பலாஹ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும்" அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அல்பலாஹ்வின் 93ஆம் ஆண்டு O/L  எழுதிய மாணவர் குழுவினர்களால் கணணியரை வசதிகள் பூரணப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும்,ஒத்துழைப்புத் தந்தவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எமது கல்லூரியின் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்ட ராஜாங்க அமைச்சர்  இந்திக்க அநுருத்த அவர்கள் புதிய கட்டிடமொன்றை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உருதியளித்தமை வரவேற்கத்தக்கது.
  நூற்றாண்டில் கால்பதித்துள்ள எமது கல்லூரி கம்பஹா மாவட்டத்தின் சிறந்த தமிழ்மொழிப் பாடசாலையாக மாற்றியமைதற்கு அணைவரும் ஒன்றுபடுவோம்.

 இன்ஷா அல்லாஹ்.
    தகவல்
 SDEC &  OBA
    17/02/2020




1 comment:

  1. எமது கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஜப்னாமுஸ்லிம் இணையதளம் பங்களிப்புக்கு அல்பலாஹ் சமூகம் சார்பாக நன்றி தெறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.