Header Ads



தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட, மைத்திரிபாலவுக்கு இடமளிக்க போவதில்லை. ராஜாங்க அமைச்சர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலன்நறுவை மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட இடமளிக்க போவதில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட செய்யுமாறு கோருவதாகவும் ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்து கணிப்புகளின் படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டால் முழு நாட்டிலும் நான்கு ஆசனங்களை மாத்திரமே கைப்பற்ற முடியும் எனவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட அமைக்கப்படும் புதிய கூட்டணி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைக்கும் நிபந்தனை அநீதியானது என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனைகள் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே அநீதி ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. முன்னாள் சனாதிபதிக்கு பொஹொட்டுவ கட்சியில் இடம் கொடுப்பதை விட்டு அப்பாவி 300 பேரைக் கொலை செய்த படு கொலைகளுக்கு உரிய தண்டனையைக் கொடுக்க அவரைப்பிடித்து முதலில் சிறையில் அடைக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.