Header Ads



தலைவர் ஹக்கீம் குறிப்பிட்டது, தேர்தலுக்கு முந்திய கூட்டு பற்றி அல்ல

"இவ் அரசின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிரான ஓரணியாக இணைந்து போராட உள்ளோம்" என்று மு.கா தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் - நேற்றைய தினம் கண்டியில் நடந்த பேராளர் மாநாட்டில் கூறிய விடயம் - தேர்தலுக்கு பின்னராக சேர்ந்து இயங்குவதை பற்றியே குறிப்பிடுகிறது.
ஏன்எனில், பாராளுமன்ற தேர்தல் வெட்டுப்புள்ளியை 5% யிலிருந்து 12.5% மாக அதிகரிப்பதற்கான முயற்சி என்பது - சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளையே பாதிக்கும். அந்தவகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறு கட்சியான ஜே.வி.பி போன்ற கட்சிகள் இவ்வெட்டுப்புள்ளி அதிகரிப்பினூடாக நேரடியாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் - இவ்வாறான கட்சிகளோடு இணைந்து அல்லது கூட்டுச்சேர்ந்து - இவ்வாறு வெட்டுப்புள்ளியை அதிகரிக்க எடுக்கப்படும் ஜனநாயக விரோத செயற்பாட்டிற்கு எதிரான முயற்சிகளில் ஈடுபடுவதனையே - நேற்றைய தினம் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் குறிப்பிட்டார். மாறாக, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை.
அவ்வாறு தலைவர் றஊப் ஹக்கீம் அவ்வாறு சொன்னதை - அங்கும் இங்குமாக வெட்டி - இணைத்து (Editing செய்து) - ஹிருவும் மற்றும் தெரணயும் போன்ற இனவாத சிங்கள ஊடகங்கள் - நேற்றைய செய்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளன.
இதன் அடிப்படையில் - இந்த செய்திகளை வைத்து - ஜே.வி.பியும் முந்திக்கொண்டு எதிர்ப்பு அறிக்கை விட்டிருக்கிறது. ஜே.வி.பியின் அச்சமும் ஒரு விதத்தில் நியாயமானதுதான். ஏன்எனில், இன்றைய ஆட்சியாளர்களால் மீண்டும் மீண்டும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படும் முஸ்லிம்களோடு கூட்டு வைத்தால் - தமது சிங்கள வாக்கு வங்கி சிதைந்து போய்விடும் என்ற அவர்களின் அச்சமும் நியாயமானதுதான்.
ஆனால், தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் குறிப்பிட்டது - தேர்தலுக்கு முந்திய கூட்டு பற்றி அல்ல - மாறாக, தேர்தலுக்கு பின்னரான கூட்டு என்பதை எல்லோரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்தக் கூட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். மாறாக "குறுடன் யானை பார்த்தது" போல விமர்சிப்பது - காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த மட்டுமே பயன்படும். மாறாக, சமூக பாதுகாப்புக்கான வழிமுறையாக அமையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.