Header Ads



பள்ளிவாசலுக்குள் புத்தர்சிலை, முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயல்

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

ஜனநாயக நாட்டில் இறைமை மற்றும் உரிமைகளை மீறுகின்ற  இச்செயலானது கேலிக்குரியது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் தடுப்பது, அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் டுவிட்டர் பக்கத்திலும் இந்தக்கண்டனம் பதிவேற்றப்பட்டுள்ளது.

5 comments:

  1. UNDA ARASHAANGATHILA NADANDA
    SHAMBAVAM. POIYAN APPOLUTHU
    THOONGIKONDIRUNDEEYA.
    CHAMPIKAYUDAN KOOTTU SHERNDU
    THUVESHATHAI KILARIYAVAN NEE.
    INNUM AVANUDAYA MADIYIL
    THOONGIKONDIRUKKIRAI.
    MATRVARKALMEL PALISHUMATHIVITTU
    THAPPITHUKOLLA PAARKIRAI.
    POIYAN.

    ReplyDelete
  2. election time. Some more to come. Champika is talking more. wait and see what will take place?

    ReplyDelete
  3. முஸ்லீம்கள் கோழைகளாக இருப்பதுதான் இந்த நிலைமைக்கு ஒரேயொரு காரணம்.

    இவ்வாறு தேவாலயங்கள் கோயில்களுக்கு சிங்களவகள் செய்வதில்லை

    ReplyDelete
  4. சட்டம் என்ன சொல்லுகிறது? சட்டம் தெறிந்தவர்கள் யாராலும் இப்பிரச்சினையை சட்டபூர்வமாக எப்படி அணுகலாமெனெ எழுதுங்கள் பேசுங்கள், கொஞ்சம் மனதிற்கு ஆறுதல் அளிக்கும்.

    பலர் சட்டத்தை படித்து வைத்து தன் அறிவுக்கும் சமுகத்திற்கும் பிரயோசனமில்லாமல் உள்ளார்கள் என்பது கசப்பான உண்மை, இல்லையேல் குட்டகுட்ட தொடெர்ந்து குணியும் முட்டால்களாக நாமிருக்க தேவையில்லை.

    நம்முறிமைகளை ஏன் சட்டபூர்வமாக அணுக முடியாது, ஏன் அப்படி செய்வதில்லை? நாமென்ன தனி நாடு கேட்டோமா?

    ReplyDelete
  5. நானும் கண்டிக்கிறேன் நாமெல்லோரும் கண்டிப்போம் எமக்கு உரிமை கிடைத்து விடும்.


    நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி-கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி!

    ReplyDelete

Powered by Blogger.