Header Ads



சஜித்திற்கு நிதி தொடர்பாக, எந்த அறிவும் இல்லை - பந்துல

குறை நிரப்பு பிரேரணையை தோற்கடித்தன் மூலம் எதிர்க்கட்சித் தலைவரின் நிதி தொடர்பான அறிவு நன்றாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் நிதி தொடர்பாக எந்த அறிவும் இல்லாத நடந்ததுக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இது எனவும் அவர் கூறியுள்ளார். அரச செய்தி திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களையும் செலுத்துவதற்காக இந்த குறை நிரப்பு பிரேரணை கொண்டு வரப்பட்டது.

வரவு செலவு இடையிலான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவது நாடாளுமன்றத்தின் கடமை.

இதனை நிறைவேற்ற எதிர்க்கட்சித் தலைவரால் முடியாது என்றும் அரசுக்கு சேவைகளை வழங்கியவர்கள் தற்கொலை செய்துக்கொள்ள நேரிடும் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. உண்மைதான்,சஜித்துக்கு பொருளாதாரம் பற்றி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. ஆனால், ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு மாதாந்தம் ரூபா 2500/= இருந்தால் எப்படி சொகுசாக வாழலாம் என நான் இந்த நாட்டு மக்களுக்குக் கற்றுக் கொடுப்பேன்.அந்த அளவு பொருளாதார நிபுணத்துவமும் அனுபவமும் எனக்கு இருக்கின்றது!

    ReplyDelete
  2. ஆமாம் நிதி என்ற பெயரில் மக்கள் சொத்தை ஆட்டையை போடுவதில் சஜித்திட்கு எந்த அறிவும் இல்லை எனபது திட்டமான உண்மை!

    ஏட்கனவே வாங்கிய கடனை திரும்ப கொடுக்கமுடியாமல் நாட்டு நிர்வாகம் அந்தரங்கத்தில் உள்ளது

    மீண்டும் நாட்டு மக்களின் பெயரில் கடன் வாங்கி எங்களின் சொத்துக்களை விற்பனை செய்யாதிங்கடா!

    மக்கள் புத்தாண்டு கொண்டாட எங்களுக்கு கடன் வேங்கி தாருங்கள் என்று எத்தனைபேர் உங்களிடம் கோரிக்கை வைத்தார்கள்

    ஏன்னடா மீண்டும் மீண்டும் நாட்டுமக்களை கடனாளியாக மாற்றுகின்றீர்கள்!?

    ReplyDelete
  3. அறிவுக்கொழுந்து . புதிய கடன் எடுத்து பழைய கடனுக்கு வட்டி கட்டி மக்களுக்கு சலுகை செய்ய போறாராம் . எருமை மாடு . அப்போ புதிய கடனுக்கு வட்டி உங்கப்பனா கேட்டுவான் . அதுவும் நம்ம தலையில தான் . 

    ReplyDelete

Powered by Blogger.