February 28, 2020

முஸ்லிம்களுடைய பொறுப்பற்ற செயற்பாட்டினால் பாராளுமன்றப் பிரநிதிநித்துவம் இல்லாமற் போயிற்று

இக்பால் அலி
இம்முறை குருநாகல் மாவட்டத்தில முஸ்லிம்கள் ஒன்று பட்டால் ஆளும் தரப்பில் பாராளுமன்றப்   பிரநிதி ஒருவரை இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம். எனினும்  இதன் முக்கியத்துவம் பற்றி அவர்கள் இன்னும் தெளிவாக உணர்ந்து கொள்ளவில்லை. இம்மாவட்ட முஸ்லிம்கள் பொறுப்பற்ற செயற்பாடுகளாலும் உதாசீனத்தாலும் தமக்குரிய பிரதிநித்துவத்தை  ஏனையவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையிலேயே இன்னும் வாழ்ந்து வருகின்றோம். இது தொடர்பாக முஸ்லிம்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்தார்.
'எதிர் காலத்திற்காய் ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் குருநாகல் மாவட்டத்தில் தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதியிலுள்ள முஸ்லிம் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களுக்கு சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு   ரிதிகம கிறின் விச் ஹோட்டலில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
குருநாகல் மாவட்டத்தில் தங்களுடைய சனத்தொகையின் எண்ணிக்கைக்கு  ஏற்ப ஒரு  பாராளுமன்றப் பிரநிதித்துவத்தைப் பெற்றுக் கொண்டு பலத்தை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கடந்த காலத்தில் அலவி என்பவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்ப்பட்டார். அதற்குப் பின்னர் இன்னும் எவரும் தெரிவு செய்யப்பட வில்லை. 
2015 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் வைத்தியர் சாபி போட்டியிட்டிருந்தார். ஆனால்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பில் அப்போது எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் நிறுத்தப்பட வில்லை. இருப்பினும் வைத்தியர் சாபி  53000 வாக்குகள் பெற்ற போதிலும் அவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட வில்லை.  அதேவேளையில் முஸ்லிம் பிரதிநித்துவங்களை இல்லாமற் செய்வதற்காக முஸ்லிம்களே சாபிக்கு வாக்களிக்காமல் தேசிய கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு  வாக்குகளை வழங்கி அவருடைய வெற்றிக்கு தடையாக செயற்பட்டவர்களும் உண்டு.  கடந்த பொதுத் தேர்தலில் இம்மாவட்டத்தில் அதானிக்க முடிந்தது. இது மாவட்டத்தில் இடம்பெற்றது என்பது வருந்தத்தக்க செயற்பாடாகும். 
இம்மாவட்ட முஸ்லிம் மக்களுடைய பொறுப்பற்ற செயற்பாட்டினால் கடந்த வரும் கிடைக்க வேண்டி பாராளுமன்றப் பிரநிதிநித்துவம் இல்லாமற் போயிற்று. ஆனால் குருநாகல் மாவட்டத்தைப் பொறுத்த வரையிலும் ஆளும் மொட்டுக் கட்சியில் ஒரு முஸ்லிம் பிரநிதித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்ளுவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. 
குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதன் காரணமாக 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும்  தரப்பில் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கிடுகிறது. கடைசியாக செல்பவர் குறைந்தது 40000 வாக்குகள் எடுத்தாலே போதுமானதாகும். எனவே இந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம்கள் கைநழுவ விடக் கூடாது. கடந்த வருடம் விட்ட தவறை இவ்வருடமும் செய்யக் கூடாது. இம்மாவட்ட முஸ்லிம் மக்களுடைய பொறுப்பற்ற செயற்பாட்டினால் கிடைக்க வேண்டிய முஸ்லிம் பிரதிநித்துவத்தை பறிகொடுத்து விட்டு காலம் பூராவும் அரசியல் அனாதையாக நிற்க வேண்டி நேரிடும்.
எனவே நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நிறையவுள்ளன. நமது ஒற்றுமையின் மூலமே நமது பலத்தை உறுதிப்பட எடுத்துக் காட்ட முடியும் உண்மையிலேயே சமூகங்கள் தங்களுடைய பிரதிநித்துவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் என்பது மிகவும் அவசியமானதாகும். குறிப்பாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பு உரிமை என்பது வெறுமனே அபிவிருத்தியை மையப்படுத்தியது  மட்டுமல்ல குருநாகல் மாவட்டத்தில் வாழக் கூடிய ஒவ்வொரு முஸ்லிம்களுக்கு உரிய கௌரவத்தையும் அடையாளத்தையும் மக்களின் இருப்பையும் எடுத்துக் காட்டக் கூடியதாகக் காணப்படுகிறது. ஆகவே அந்த வகையில் நோக்குகின்ற போது ஒவ்வொரு முஸ்லிம் மகனும் வாழக் கூடியவன். தங்களுடைய சுய கௌரவம் அடையாளத்தை முன்னிறுத்தி செயற்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

3 கருத்துரைகள்:

முஸம்மில் போல் சூதாட்ட தரகர்களை முஸ்லிம் சமுதாயம் சார்பாக பாராளுமன்றம் அனுப்புவதை விட அந்த பிரதிநிதித்துவத்தை இழப்பதே மேல்

MUNAFQUES AND HOODWINKERS SHOULD BE POLITICALLY DRIVEN AWAY FROM THE POLITICAL PLAYING FIELD OF SRI LANKA FOR THE MUSLIM COMMUNITY TO PROSPER IN THE COMMING YEARS, Insha Allah. A.J.M. Muzzamil is one of them, Insha Allah. HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth.
Noor Nizam - Convener "The Muslim Voice".

However u are notb suitable to become a member of a praseshiya sabha.there are many more people in kurunagela much better than u.

Post a Comment