Header Ads



இலங்கை என்பது அன்பானவர்களால் நிறைந்த ஒரு நாடு, சீன பெண்

இலங்கை என்பது அன்பானவர்களால் நிறைந்த ஒரு நாடு என ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த சீன பெண் தெரிவித்துள்ளார்.

முழுமையாக குணமடைந்த குறித்த பெண், இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். இதன்போது மத வழிபாடுகளில் கலந்து கொண்டவர் ஊடகங்களில் கருத்து வெளியிடும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை அன்பானவர்களால் நிறைந்த ஒரு நாடாகும். 26 நாட்கள் என்னை மிகவும் அன்புடன் இலங்கை வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் பராமரித்தனர்.

கொடிய நோயில் பாதிக்கப்பட்ட என்னை இறுதியில் குணப்படுத்திவிட்டார்கள். எனது முழு மனதோடு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை அன்பாக பார்த்துக் கொண்ட வைத்தியர்கள் உட்பட பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கைக்கு நான் மீண்டும் வருவேன். எனது நண்பர்களையும் வருமாறு கூறுவேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. கொட்டரமுல்லையில் அப்பாவி பவ்சுல் அமீரை துடிக்க துடிக்க வெட்டி தெருவில் இழுத்துச் சென்ரதும் இந்த மக்கள்தான்.

    ReplyDelete
  2. Please come again but don't bring CORONA or any virus..AND your dirty food.
    Thanks you.

    ReplyDelete

Powered by Blogger.