February 25, 2020

மிம்பர்களில் மக்களை அச்சமூட்ட வேண்டாம், ஹக்கீம்

‘‘எங்கள் முடி­வு­க­ளை­யெல்லாம் இனிமேல் நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சிலர் பேசத் தலைப்­பட்­டி­ருக்­கி­றார்கள். நாங்கள் ஒரு­போதும் அடி­மைத்­த­ன­மாக முடி­வெ­டுக்க முடி­யாது. மக்­களை நியா­ய­பூர்­வ­மாக முடி­வெ­டுங்கள் என்று விட்­டு­வி­டு­வ­துதான் ஆன்­மிகத் தலை­வர்­களின் பொறுப்­பாக இருக்க வேண்டும். அதை மீறி மிம்­பர்­களைப் பாவித்து மக்­களை அச்­ச­மூட்­டு­வதை எந்­த­வி­தத்­திலும் ஏற்றுக் கொள்ள முடி­யாது‘‘ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 29 ஆவது பேராளர் மாநாடு நேற்று முன்­தினம் கண்டி, பொல்­கொல்ல மஹிந்த ராஜபக் ஷ கேட்­போர்­கூ­டத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு சிறப்­பு­ரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

கடந்த 14.02.2020 வெள்­ளிக்­கி­ழமை கொள்­ளுப்­பிட்டி ஜும்ஆ பள்­ளி­வா­சலில் குத்பா பிர­சங்கம் நிகழ்த்­திய அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, முஸ்­லிம்கள் அர­சியல் தொடர்­பான தமது பாரம்­ப­ரிய சிந்­த­னை­களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் சிதறி வாழும் முஸ்­லிம்கள் அங்­குள்ள பெரும்­பான்மை சமூ­கங்­க­ளுடன் இணைந்து தேசியக் கட்­சி­களை ஆத­ரிக்க வேண்டும் என்றும் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார். இதற்கு மறை­மு­க­மாக பதி­ல­ளிக்­கை­யி­லேயே மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில், ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஜனா­தி­ப­தியின் ஆரம்ப உரை­யிலும் பின்னர் அவர் ஆற்­றிய பாரா­ளு­மன்ற உரை­யிலும் அச்­ச­மூட்டி எச்­ச­ரிக்கை செய்­வது போன்ற ஒரு போக்­கினை அவ­தா­னிக்க முடிந்­தது. அவ்­வாறு அச்­ச­மூட்டி எச்­ச­ரிக்கை செய்­வதை இன்று வேறு சிலர் முன்­னெ­டுக்க முயல்­வது கவ­லை­ய­ளிக்­கி­றது.

மன்­னித்துக் கொள்ள வேண்டும்.

உல­மாக்கள் குறிப்­பாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பிர­மு­கர்கள் இருக்­கின்ற இந்த மேடையில் நான் இதனைச் சொல்­கிறேன்.

எங்கள் முடி­வு­க­ளை­யெல்லாம் இனிமேல் நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் பேசத் தலைப்­பட்­டி­ருக்­கிறோம். என்னைப் பொறுத்­த­வ­ரையில் நாங்கள் ஒரு­போதும் அடி­மைத்­த­ன­மாக முடி­வெ­டுக்க முடி­யாது.

நாங்கள் முடி­வு­களை நியா­ய­மாக எடுக்க வேண்டும். எது வந்­தாலும் அந்த சவால்­களை எதிர்­கொள்­வ­தற்கு நாங்கள் தயா­ராக இருக்க வேண்டும்.

ஆனால், ஜன­நா­யக ரீதி­யாக மக்­க­ளு­டைய முடி­வு­களில் தலை­யிட முடி­யாது.

முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ராக கூட மக்­க­ளிடம் வேண்­டு­கோ­ளையே முன்­வைக்­கலாம். ஆனால் இரண்டும் கெட்டான் நிலை­யாக இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்­ச­மாக வாக்­கு­களைப் பிரித்துப் போடுங்கள் என சிலர் கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. என்னைப் பொறுத்­த­வ­ரையில் கையா­லா­காத கதை இது.

இப்­படி அச்ச உணர்­வோடு இந்த விட­யங்­களை அணுகக் கூடாது. மக்­க­ளு­டைய ஜன­நா­யக உரி­மை­களை, எந்த தரப்பு உங்­க­ளுக்கு நியாயம் செய்யும் எனக் கரு­து­கி­றீர்­களோ, அவர்­களைப் பற்றி நீங்கள் நியா­ய­பூர்­வ­மாக முடி­வெ­டுங்கள் என்று விட்­டு­வி­டு­வ­துதான் ஆன்­மிகத் தலை­வர்­களின் பொறுப்­பாக இருக்க வேண்டும். அதை­மீறி மிம்­பர்­களைப் பாவித்து மக்­க­ளி­டத்­திலே, ‘‘ஆபத்­தான காலம் ; பயங்­க­ர­மான ஆட்­சி­யா­ளர்கள், தயவு செய்து அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் போடுங்கள்‘‘ என்று சொல்­வது என்னைப் பொறுத்­த­ளவில் எந்­த­வி­தத்­திலும் நியா­ய­மான ஒரு நிலைப்­பா­டாக இருக்க முடி­யாது. அப்­ப­டி­யான ஒரு தலை­யீட்டைச் செய்­வ­தென்­பது மக்­க­ளது ஜன­நா­யக உரி­மையில் கைவைப்­ப­தாகும். இப்­படி அச்­சப்­பட்ட ஒரு நிலையில் முடி­வெ­டுக்க முடி­யாது.

மக்கள் சுதந்­தி­ர­மாக முடி­வெ­டுக்­கட்டும்.

இந்த விட­யத்தில் ஒற்­று­மைப்­ப­டு­வ­தாக இருந்தால் அனை­வரும் ஒரே அணியில் ஒற்­று­மைப்­ப­டுவோம் என்­பதை நான் பல இடங்­களில் வலி­யு­றுத்­தி­யுள்ளேன். ஆனால் அங்கு சிலர் ஒற்­று­மைப்­ப­டுங்கள், இங்கு சிலர் ஒற்­று­மைப்­ப­டுங்கள் என்று கோரு­வதை ஏற்க முடி­யாது. இதை­வி­டவும் கையா­லா­காத அர­சி­யலை நாங்கள் செய்ய முடி­யாது. பயந்து பீதியில் இந்த விட­யங்­களை அணுக முடி­யாது.

என­வேதான் சமூகம் நேர்­மை­யாகச் சிந்­திக்க வேண்டும். அச்­சத்­திலே பயத்­திலே முடி­வெ­டுப்­ப­தென்­பது இந்த சமூ­கத்­திற்கு ஆகாத விடயம். ஒரு சிறிய கூட்­ட­மாக இருந்­தாலும் அந்தக் கூட்­டத்தை இறைவன் நாடினால் வெற்றி பெற வைப்பான் என்று பத்ரு யுத்தத்தை உதாரணம் காட்டி நாங்கள் சொல்கிறோம். நாங்கள் ஒரு சிறுபான்மை இனம். எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

தோல்விதான் கிடைத்தாலும் அதை வெற்றியின் படிகளாகக் கொண்டு அடுத்த கட்ட அரசியலை தைரியமாக சந்திக்கின்ற ஒரு சமூகமாக நாம் மாற வேண்டும். அதற்கு எங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மு.கா தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனதுரையில் மேலும் குறிப்பிட்டார்.-Vidivelli

8 கருத்துரைகள்:

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போகிறார்களாம். பிறை பார்ப்பதிலும், திருமண விவகாரத்திலும் சமரசம் காண முடியாதவர்கள் அரசியல் பேசுகிறார்களா? தூ....

who accepted these maaakal sabai, those crazy do not follow islam also

ஹக்கீமைப் போல அரசியல் செய்வதற்கு ஒரு அவக்கர் காக்கா குஞ்சு இருந்தால் போதும்.

Oh suhaib avargalukku piraikooda paakka theriyaathe

தேர்தல் காலம் வந்தால் ஹக்கீம் அவர்களிடம் ஆவேசம் வந்து விடும் .தேர்தல் முடிந்து விட்டால் ஆவேசம் சென்று விடும்

எரியும் வீட்டில்... கிடைப்பதை பிடுங்கத்துடிக்கும் கயமைகள்!

உலமாக்களை குறை கூறுபவர்களே இறைவனை பயந்து கொள்ளுங்கள்.. அவர்களுக்கு கட்டுப் படாததால் தான் சஹ்ரான் போன்றவர்கள் உருவாகினார்கள் என்பதை மரந்து விடாதீர்கள்...
றவூப் ஹக்கீமின் பேச்சைக் கேட்டு அபூ தாலிபைப் போல முடிவெடுத்து(பழையதை விடமாட்டோம் ) நஷ்டமடைந்து விடாதீர்கள்.. இதைத்தான் உலமா சபை தலைவர் கற்று தந்துள்ளார்..
சிந்தித்து வாக்களியுங்கள்..

QURAN,HADEESKALIL KOODA ACHAMOOTTUM
SHEITHIKAL IRUKKA,IVAN MATTUM
EN VENDAAM ENDRU SHOLKIRAN.
ISLAM THERIYAATHA MUTTAAL,

VARUKIRA NAATKALIL ARASHIYALUKKAAKA
QURANAIYUM,HADEESKALAIUM
POI ENRU SHOLLUMALAVUKKU
VANDUVIDUVAAN.
MUSLIMGALEY POIYANAI NAMMBAATHEERKAL.

Post a Comment