Header Ads



கொரோனா தாக்கத்தால் சீனா அல்லல்பட்டபோது இலங்கையும், அரசாங்கமும் மக்களும் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி

இலங்கை தூதுவராக கடமையாற்ற கிடைத்தமையை உயரிய கௌரவமாக கருதுவதாக இலங்கைக்கான சீன தூதுவர் வென் சுயூவான் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (27) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை கூறினார். 

பதவி உயர்வு பெற்று செல்லவுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் புதிய பதவியின் ஊடாக இலங்கைக்கு ஆற்றக் கூடிய அனைத்து சேவைகளையும் வழங்க எதிர்பார்பதாக தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனா அல்லல்பட்ட போது இலங்கை அரசாங்கமும் மக்களும் வழங்கிய ஒத்துழைப்புக்கும் இலங்கைக்கான சீன தூதுவர் வென சுயூவான் நன்றி தெரிவித்துள்ளார். 

இதன் போது விடைபெறும் சீன தூதுவருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி சீனாவால் இலங்கையில் செயற்படுத்தப்படும் செயற்றிட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார். 

இலங்கையில் சீனாவால் மேற்கொள்ளப்படும் போட் சிட்டி திட்டத்திற்கு விசேட சலுகைகளை வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

1 comment:

  1. இந்த நன்றியை இன்னும் ஒரு மாதம் கழித்து சொன்னாள் நன்றாக இருக்கும். ஏனெனில் அவ்வளவு கொரோனாவும் இலங்கையில்தான் குடிகொண்டுள்ளது அது இப்போதைக்கு தெரியவராது.

    ReplyDelete

Powered by Blogger.