Header Ads



ஆர்ப்பாட்டத்திற்கு ஒதுக்கிய இடத்தில், எவ்வளவு நேரமும் போராட்டத்தை முன்னெடுக்கலாம்

(இராஜதுரை ஹஷான்)

போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கும், பொது மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்ப்பதற்காகவே போராட்டத்தை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி காலி முகத்திடலில் பிரத்தியேகமாக ஒரு இடத்தினை ஒதுக்கியுள்ளார்.

எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தை இனி இவ்விடத்தில் முன்னெடுக்கலாம் என அமைச்சரவை  பேச்சாளர்  பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று 6 இடம் பெற்ற  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆகியோர்  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

கொழும்பு நகரை பிரதானமாக கொண்டு முன்னெடுக்கப்படும் போராட்டங்களினால் பொது மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு   முகம் கொடுகின்றார்கள்.

குறிப்பாக ஜனாதிபதி செயலக பிரவு,லோட்டஸ் சுற்றுவட்டம் ஆகிய  பகுதிகளில் இந்நிலைமை அதிகளவிலேயே காணப்படுகின்றன.

ஆரம்பாட்டத்தை மேற்கொள்பவர்கள் எல்லை மீறி செயற்படும் போது பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர்புகை  பிரயோகம், தடியடி உள்ளிட்ட தாக்குதல்களை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்படும்.

இதனால் அரச சொத்துக்கள்  பெருமளவில்  கடந்த காலங்களில்  பாதிப்படைந்துள்ளன.

போராட்டங்களை அரச அதிகாரம் கொண்டு தடை செய்ய முடியாது.  அவ்வாறு செய்தால் அது மாறுப்பட்ட கருத்தினை தோற்றுவிக்கும்.  இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டே  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டகாரர்கள் எவருக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் போராட்டத்தை முன்னெடுக்க  பிரத்தியேகமாக இடத்தினை ஒதுக்கியுள்ளார்.

ஆரம்பாட்ட இடம் என்று மும்மொழியிலும் எழுதப்பட்ட   பெயர்பலகை  இவ்விடத்தில் காணப்படுகின்றன.

ஆகவே  இனி ஆர்பாட்டகாரர்கள்  எவருக்கும் எவவித  தடைகளும் ஏற்படுத்தாமல் எவ்வளவு நேரமும் இவ்வித்தில் போராட்டத்தை  முன்னெடுக்கலாம்.எவரும் தடைகளை ஏற்படுத்த மாட்டோம்.

இவ்வாறான செயற்பாட்டினால் போராட்டங்களை கவனிக்காது விடுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல, நியாயமான கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வினை நியாயமான பேச்சுவார்த்தையின் ஊடாக  பெற்றுக் கொடுப்போம்  எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.