February 25, 2020

ஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)

மகர  சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில்   புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளது,   நவமணி பத்திரிகை ஆசிரியர் என்எம் அமீனும் இதனை உறுதிப்பத்தினார்

(ரிஹ்மி ஹக்கீம்)
கம்பஹா மாவட்டம், மஹர தேர்தல் தொகுதியிலுள்ள  றாகமையிலிருக்கும் மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் ஜும்ஆ மஸ்ஜித் கட்டிடத்தில்  சிறைச்சாலை அதிகாரிகளால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

 இப்பள்ளிவாசலானது சுமார் 100 வருடங்கள் பழைமைவாய்ந்தது என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் தனவந்தர் ஒருவரால் வக்ப் செய்யப்பட்ட காணியிலேயே பள்ளிவாசல் இயங்கி வந்துள்ளது. றாகமை பிரதேச முஸ்லிம்கள் இதனையே தமது தொழுகைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் மஹர சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் இப்பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக மக்கள் வருவதை தடை செய்துள்ளனர். மற்றும் பள்ளிவாசலை சுத்தம் செய்யவோ அல்லது பொருட்களை எடுப்பதற்கோ கூட எவருக்கும் அனுமதி கொடுக்கவில்லை.

றாகமையின் அண்மைய ஜனாஸா நிகழ்வுகளுக்குக் கூட தேவையான கழுவும் கட்டில், சந்தக்கு போன்றவற்றை மாபோல பள்ளிவாசலில் இருந்தே பெற்றுக்கொண்டதுடன், ஜனாஸா தொழுகைகள் கூட மையவாடிக்கு அருகிலிருக்கும் பழைய வீட்டிலேயே தொழுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பள்ளிவாசல் கட்டிடம்,  சிறைச்சாலை அதிகாரிகளால் புனரமைக்கப்பட்டு ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு உள்ளே புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த துர்ப்பாக்கியமான சம்பவம் தொடர்பில் அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள் கவனத்திற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இது தொடர்பில் நாம்  பள்ளிவாசல் தலைவரை தொடர்பு கொண்டபோது,
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பிலும், பள்ளி வாசல் தொழுகைக்காக திரும்பவும் கிடைக்க வேண்டி சென்ற ஆட்சியில் இருந்து அரசியல் வாதிகள் மூலம் தாம் முயற்சிகள் மேற்கொண்டு வந்தும் எதுவும் கைகூடவில்லை எனவும் , தற்போது ரியாஸ் சாலி அவர்கள் மூலம் பள்ளிவாசல் தொடர்பான உரிமை  ஆவன பிரதிகள் கொண்டு பிரதமருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட உள்ளதாகவும், நாளை நீதி அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.


12 கருத்துரைகள்:

Racist goverment and racist peoples.

This comment has been removed by the author.

எங்க போனவங்கள் போனஸ் அரசியல் வாதிகளும் தாம்மை தாமே முஸ்லிம்களின் தலைவர்களா காட்சிப்படுத்தும் செல்ல காசு அரசியல்வாதிங்களும்?

MUTTAALKAL PESHUKIRAARKAL.
RANIL ARASHANGATHIL NADANDA
SHAMBAVAM ITHU.
RANIL ARASHIN PANGAALIKAL, POIYARKAL,
HAKEEM,RISHAD,FOUZI, M RAHMAN,MARIKKAR
THOONGIKONDU IRUNDANUKALAA????

Please inform President Lawyer Mr. Sibly

அடிப்படைவாதம், தீவிரவாதம் என்பெதெல்லாம் பொளத்தர்களுக்கே உரித்தானது என இதிலிருந்து விளங்கவில்லையா?
அரசுக்கு விளக்கு பிடிக்கும் அலிசப்ரி, றிஸ்விமுப்திகள் எங்கே?
முன்னேர நினைக்கும் நாடுகளுக்கு இப்படியான கீழ்த்தரமான வேளைகள் மிகவும் மு ட் டு க் கட்டை கள் என்பது கவணிக்க வேண்டியது. அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய இதுபற்றி சிந்திக்க வேண்டும்.

මූලධර්මවාදය සහ අන්තවාදය රාජධානියට අයත් බව මින් අදහස් නොවේ ද?
රාජ්‍යය ආලෝකවත් කරන අලිසබ්රි සහ රිස්විමුපි කොහෙද?
සංවර්ධනය වෙමින් පවතින රටවලට එවැනි පහත් කාලයන් ඉතා වැදගත් බව සැලකිල්ලට ගැනීම වැදගත්ය. අතිගරු ජනාධිපති ගෝතභයා මේ ගැන සිතා බැලිය යුතුය.

THIS IS JUST START, WAIT AND SEE AFTER ELECTION, YOUR PRESIDENT AND PRIME MINISTER VERY CLOSE TO WITH MODHI

Just starting...give them full vote or 2/3 parli.....

MAYDAIKALIL THUVESHAM KAKKIYA
HAKEEM RISHAD,MARIKKAR,RAHMAN
ENGAI

உலமா சபை எங்கே ;பிறை பார்ப்பது மட்டுமல்ல மார்க்கம் இதை அரசியல் வாதிகளின் தலையில் போட்டு தப்ப முடியாது , முஸ்லீம் சமூகத்தின் பிரதிநிதி அரசியல் வாதிகளல்ல . இதை உலமாசபை கவனத்தில் கொள்ளவும் , மந்திரி வருவான் ; போவான் உலமாக்கள் முஸ்லிம்களின் உடமைக்காக பேசுவார்களா , மக்தப் வைக்க மட்டுமல்ல , மஸ்ஜித் ; இது உலமாக்களின் அமானிதம்

அவர்கள் இறைவனைத் தேடி பள்ளிவாசலுக்கு வந்துள்ளனர்.  அவர்களது மனதில் இறைவனை நிலைநிறுத்துவதற்கு ஓர் சிலை தேவைப்பட்டிருக்கிறது, அதனை எடுத்து வந்திருக்கிறார்கள்!

மேலும் பெளத்தம் ஓர் தத்துவார்த்தம் மட்டுமே தவிர ஓர் முழுமையான வாழ்வுக்கு வழிகாட்டும் ஓர் பூரண வாழ்க்கைத்திட்டம் அல்ல என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆக, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான அனைத்துத் தகுதிகளும் இஸ்லாத்தில்தான் உள்ளது என்பதுவும் அவர்கள் அறியாதது அல்ல.

சிலைகள் இல்லாமலேயே இறைவனை அடைந்து அமைதி கொள்ளும் பாதையை - அவர்களுக்கும் சொந்தமான இஸ்லாத்தை - முஸ்லிம்கள் அவர்களுக்கு காட்டிக் கொடுத்து அவர்களை சகோதரர்களாக்கிக் கொள்வதே இவ்வாறான செயல்களுக்கான தீர்வாக இருக்கும்.

அதற்கு மேலாகவும் பகரமாகவும், மானிடரிடையே மொழிகளால் பிரிவினையை ஏற்காத இஸ்லாத்தைப் பின்பற்றும் இலங்கை முஸ்லிம்கள், சிங்களத்தை தமது எதிர்கால தாய் மொழியாக மாற்றிக் கொண்டு அழியும் மொழி பற்றிய அவர்களது அச்சத்தை அகற்றி, அவர்களோடு  ஒற்றுமையாக சகோதரர்களாக வாழ்வது  பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது.

இது மதத்திலிருந்து மார்க்கத்துக்கும் = மொழியிலிருந்து ஆட்சி மொழிக்குமான ஒரு பேரமாகவும் பார்க்கப்பட வேண்டியதாகும்.
 
சங்க சபாக்களும் அறிஞர் சபைகளும் கூடி ஆராய வேண்டிய அறப்பணிகள் இவை.

இதற்கு  இஸ்லாத்தில் எந்தத் தடையும் இருக்க முடியாது என நினைக்கிறேன்.

Post a Comment