Header Ads



இன்று நாடு இருக்கும் நிலையில் இருந்து எவ்வாறு மீட்பது, பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி நாட்டை கட்டியெழுப்புவது? அங்குதான் நாம் செல்ல வேண்டும்

நாட்டில் அரசியல் கட்சிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அன்றி பொதுமக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கே தீர்வு காண வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பொலன்னறுவையில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

இன்று சிலர் அரசியல் கட்சிகள் தொடர்பில் பேசுகின்றனர். அரசியல் கட்சிகள் அல்ல இந்நாட்டின் பிரச்சினை. நாடு மற்றும் மக்களே நாட்டின் பிரச்சினை. அதற்கு தீர்வு காண வேண்டும். அரசியல் கட்சிகளை கட்டிப்பிடித்துக் கொண்டு சண்டையிடுவது அல்ல. 

இன்று நாடு இருக்கும் நிலையில் இருந்து எவ்வாறு மீட்பது. பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி நாட்டை கட்டியெழுப்புவது? அங்குதான் நாம் செல்ல வேண்டும் என்றார். 

4 comments:

  1. இவரு கிழித்தாரு

    ReplyDelete
  2. If you can keep your mouth shut, everything will be OK by it own course.

    ReplyDelete
  3. பெறிசா கிழிச்சவரு கதைக்கிறாரு முன்னால் விதானை ஐயா.
    திட்டிதீர்க்கும் அகொளரவப்படுத்தப்படுமிலன்கையின் முதலாவது சேனாதிபதி இவர்தான், வெட்கம்.

    ReplyDelete
  4. கள்ளப்பூனை வடிவிலும் பெருச்சாலியாகவும் சூறையாடிய நாட்டு மக்களின் பணம் சொத்துக்களை திருப்பி திறைசேரியில் ஒப்படைத்தால் நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவு சீர் செய்யலாம். அதை விடுத்து அதைவிடுத்து நாட்டைக்குட்டிச்சுவராக்கி, நாட்டின் சட்டத்தை காலால் மிதித்து பொடியாக்கிவிட்டு இப்போது சட்டம் பேசாமல் நீர் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால் நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.