Header Ads



ஈஸ்டர் தாக்குதலின்பின் சாஹிர் நாயக், பீ.ஜெ. இலங்கை வந்ததாக சிங்கள ஆங்கில உடகங்கள் பொய் தகவல் வெளியீடு

இஸ்லாமிய தீவிரவாத மதகுருமார் சிலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தமிழகத்தின் ஜெய்னுல் ஆப்தீன் மற்றும் மும்பையின் சாஹிர் நாயக் ஆகியோரும் இதில் அடங்குவதாக பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

இவர்கள் இலங்கைக்கு வந்த வேளையில் மத பிரசாரங்களையும் மேற்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் குடிவரவு திணைக்களத்துடன் இணைந்து பாதுகாப்பு பிரிவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே மதரஸாக்கள் முஸ்லீம் விவகார திணைக்களத்துக்கு கீழ் கொண்டு வரப்படவேண்டும் என பாதுகாப்பு நாடாளுமன்ற கண்காணிப்பு குழு பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய 25 லங்காதீப டெய்லிமிரர் பத்திரிகைககள் முன்பக்கத்தில் இதனை செய்தியாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

4 comments:

  1. இந்த கண்மூடித்தனமான நாடாலுமன்ர குழுவுக்கு எதிராக ஆதாரம் கேட்டு வழக்கு தொடருங்கள். எங்கே அலிசப்ரி பொன்னையன்?

    ReplyDelete


  2. இந்த கட்டுக்கதை செய்தியை லங்கா தீப தன்னிசையாக பரப்பவில்லை இவ்வாறு பொய்களை சிங்கள பௌத்தமக்களுக்கு மத்தியில் பரப்பும்படி பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

    *காரணம் பாராளுமன்ற பொது தேர்தல் அன்மை கிட்டிவிட்டது*

    *PJ செய்னுல் ஆப்தீனை இலங்கைக்கு வரமுடியாமல் அதன் பாதுகாப்பு அமைப்பு பல வருடங்களுக்கு முன் தடுத்துள்ளது!

    *அவ்வாறு Zakir Nayek மோடியின் அதிகாரத்தால் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்களால் அவர் மலேசியா நாட்டைவிட்டு வெளியே செல்லாமல் அங்கே வாழ்கின்றார் இவ்வாறான நிலையில் எவ்வாறு இவர்கள் இருவரும் இந்த காலபகுதியில் இலங்கைக்கு வந்து போனார்கள்!!!* ???

    சில அரசியல் இனவாதிகள் தங்களின் நலனுக்காக முஸ்லிம் மக்களை தற்போது இலங்கையில் பழிகொடுப்பதற்கு அவர்களை பற்றி தவறாக பல பொய்களை அப்பாவி பௌத்த மக்கிளிடையே பரப்புகின்றார்கள்!

    ReplyDelete
  3. Appo antha Kurunaagala killing....and terrorism....???
    Who will punish them...or who will be responsible???

    ReplyDelete
  4. இந்த வகை சேதிகள் நடக்கவிருக்கும் சேதி நாடாளுனன்ற தேர்தலின் உத்தி மாற்றத்தை சுட்டி நிற்கிறது என தோன்றுகிறது. இம்முறை முழு முஸ்லிம்களையும் பொதுவாக இலக்கு வைக்காமல் ஒரு சாராரைக் குறி வைத்து தனிமைப்படுத்தி எதிரியாக்கபோகிறார்கள் என்பதையே சுட்டிக் காட்டுவதாக நினைக்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.