Header Ads



சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்

சாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இதனையடுத்து – இப்படியான வர்த்தமானி வெளிவந்தமையே தனக்கு தெரியாதென பொதுநிர்வாக அமைச்சர் கையை விரித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று அமைச்சரவை கூடியது. இதன்போது இந்த விடயத்தை பிரஸ்தாபித்த அமைச்சர் விமல் வீரவன்ச , சாய்ந்தமருது நகரசபை பிரகடனமானது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

அது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய , கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தையும் , சாய்ந்தமருது நகரசபை விடயத்தையும் சேர்த்து தீர்வைக்கண்டு ஒரே வர்த்தமானியில் உள்ளடக்கி வெளியிட்டிருந்தால் இனங்களுக்கிடையில் சர்ச்சை எழுந்திருக்காதென சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனிடம் அமைச்சர்கள் வினவியபோது இப்படியொரு வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தது தனக்கே தெரியாதெனவும் அது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சாய்ந்தமருது நகரசபை தொடர்பில் ஏற்கனவே வெளிவந்த வர்த்தமானி இரத்துச் செய்யப்படுமென தெரிகிறது. sivarajah

5 comments:

  1. கல்முனைக்குடியில் பட்டாசு வெடிக்கிறது பால்சோறு பொங்கிய சாய்ந்தமருது தலைகுனிந்து நிற்கிறது !
    யார் இந்த வீரவன்ச, இவருக்கென்ன அவ்வளவு அக்கறை !
    ஹகீமினதும் ஹரீஸினதும் பாராளுமன்ற சகா - மறை கரங்களூடாக சாய்ந்தமருதிற்கு நகரசபை கொடுக்ககூடாதென்ற அரசியல் சூதாட்டம் மீள ஆரம்பித்திருக்கிறது !
    பாவம் இம்மக்களை மிகவும் வெட்கக்கேடான இழி நிலைக்குத்தள்ளியிருக்கின்றது இந்த அரசியல் நாடகம் !
    அநீதி இழைக்கப்பட்ட பக்கத்தில் இறைவனிருக்கின்றான் !

    ReplyDelete
  2. சாய்ந்தமருது முஸ்லிம்களையும் கல்முனை வடக்கு தமிழ் வாக்குகளையும் ஒருங்கிணைத்தும் கல்முனைக்குடி வாக்குகளை தனிமைப்படுத்தி பணியவைத்தும் கையாளுகிற புதிய ராஜதந்திர அணுகுமுறை உருவாகி உள்ளதுபோலும்.

    ReplyDelete
  3. U N P ITHANAI ETHIRTHU NINRATHUTHAAN
    KAARANAM. MARIKKAR, HIRUNIKA INNUM PALAR ETHIRPU.

    ReplyDelete
  4. கல்முனை நான்காக பிரியாமல் சாய்ந்தமருதிற்கு சபையை கொடுத்து கல்முனையை தமிழனுக்கு கொடுக்க விரும்பாத முஸ்லிம்களுக்கு இது இனிப்பான செய்தி தான்

    ReplyDelete
  5. ஜயபாலன் ஐயா அவர்களே ! தமிழ் முஸ்லீம் உறவென்பது இன்று நேற்று அரசியலுக்காக உருவாகிய ஒன்றல்ல, அது இயற்கைகாரணிகளால் உருவாகியிருந்த பந்தம், துரதிஷ்டவசமாக அரசுகளின் பிரித்தாளும் தந்திரம் ஆயுதக்குழுக்களின் எல்லைமீறிய நடவடிக்கைகள் மற்றும் அரச படைகளின் ராணுவத்தந்திரோபாயம் என்பவைகளால் உருவாக்கிய இனமோதல் இளம் சமுதாயத்தினை கிழக்கில் தமிழ் முஸ்லீம் என இனரீதியாக வைரிகளாக உருவாக்கியிருக்கின்றது, இதன் பிரதிபலிப்புத்தான் கல்முனை தனித்தமிழ்ப்பிரிவுக்கோரிக்கையும் தமிழர் கைக்கு கல்முனை சென்றுவிடுமென்ற கல்முனைக்குடி முஸ்லிம்களின் மிகைப்படுத்தப்பட்ட அச்சமும் ! காரைதீவு மாளிகைக்காடு (சாய்ந்தமருதின் மறுஎல்லை) பிரதேசசபை ஒற்றுமையாக தமிழ் பிரதேச சபைத்தலைவர் மற்றும் முஸ்லீம் சபை உறுப்பினர்களென ஒத்துழைப்புடன் இயங்கவில்லையா ?

    ReplyDelete

Powered by Blogger.