Header Ads



மோட்டார் வாகனங்களுக்கான சொகுசு வரி நீக்கம்

மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரியிலிருந்து பல வகை வாகனங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளள்ளது.

அதற்கமைய கடந்த வருடம் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் திறந்த கடன் கடிதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 1800 சிலிண்டர் கொள்ளளவுக்கு மேல் இல்லாத பெட்ரோல் மோட்டார் வாகனங்களின் சொகுசு வரி நீக்கப்பட்டுள்ளது.

2300 சிலிண்டர் திறனைத் தாண்டாத அனைத்து டீசல் மோட்டார் வாகனத்திற்கும் அல்லது இயந்திர சக்தி 200 கிலோவோட்டை தாண்டாத அனைத்து மின்சார வாகனங்களுக்கும் இந்த சலுகை கிடைக்கிறது.

எனினும் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்த வாகனங்களை இலங்கை சுங்கத்திடம் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2 comments:

  1. அரிசிக்கான வட் வரியை 15% இருந்து 8%மாகக் குறைத்ததாக அரசாங்கம் அறிவித்த பின் 98 ரூபாவுக்கு இருந்த அரிசி இப்போது 140 - 150 ரூபா கொடுத்து வாங்க நிர்பந்திக்கப்பட்டோம். மணல் தோண்டுவதற்கு லைஸன்ஸ் தேவையில்லை என அரசாங்கத்தின் அடிவருடி மாபியாக்களுக்கு நாட்டின் மண்ணைச் சுரண்டி கோடிஸ்வரர்களாக மாற அரசாங்கம் அனுமதியளித்தது. அதனால் விவசாயிகளின் விவசாயம், நீர் ஊற்றுகள் அழிந்து செல்வதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி அரசாங்கத்துக்கு அறிவித்த போதும் அரசாங்கத்தைப்பொறுத்தவரை செவிடன் காதில் ஊதிய சங்குதான். இனி கார்களின் சொகுசுவரி நீக்கப்பட்டதாக அரசாங்கம் மற்றொரு தேர்தல் ஜில்மார்ட்டை அறிவித்திருக்கின்றது. பொய்யையும், புரட்டையும் அடிப்படையாகக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசு பொய்,புரட்டுகளால் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரலாம் என கனவு காண்கிறது. பொது மக்கள் விழித்துக் கொண்டிருக்கின்றார்களா என்பதை அடுத்த தேர்தல் முடிவுகள் மூலம் தான் அறிந்துகொள்ளலாம். இந்த நாட்டில் எழுத வாசிக்கத் தெரிந்த வீதம் எவ்வளவு அதிகரித்திருந்தாலும் பொதுமக்கள் மடத்தனத்தையும் போலியையும் தான் தொடர்ந்தும் நம்பிவந்திருக்கின்றார்கள் என்ற கசப்பான ஒரு உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டியிருக்கின்றது.

    ReplyDelete
  2. பொய் புரட்டினால் மட்டும் அல்ல ஆட்சியை பிடித்தது. முக்கியமாக பலநூறு அப்பாவிகளைக்கொன்றுதான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். .

    ReplyDelete

Powered by Blogger.